• May 21 2024

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட மகன்! அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இந்தியக் குடும்பம்! SamugamMedia

Chithra / Mar 6th 2023, 6:57 am
image

Advertisement

மேற்கு அவுஸ்திரேலியா பெர்த்தில் வாழ்ந்துவரும் இந்திய குடும்பத்தினர் அவர்களது மகனது நோய்நிலைமை காரணமாக நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளனர். 

இந்தியா கேரளாவைச் சேர்ந்த அனீஷ் கொல்லிக்கரா மற்றும் கிருஷ்ணா அனீஷ் தம்பதியர் தமது இரு குழந்தைகளுடன் கடந்த 7 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், 10 வயது மகன் ஆர்யனுக்கு Down syndrome எனும் நோய் நிலைமை உள்ளமையினாலும், மருத்துவ செலவுகள் அதிகம் என்பதாலும், குழந்தை வரி செலுத்துவோருக்கு சுமையாக கருதப்படுவதாலும் இந்திய சிறுவனுக்காக அவர்களது குடும்பத்தின் நிரந்தரமாக தங்குவதற்கான விசாவை அரசாங்கம் ரத்து செய்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதனையடுத்து இக்குடும்பம் இரண்டு வாரங்களுக்குள் நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் குடிவரவு அமைச்சின் இச்செயல் மனிதாபிமானமற்றது என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்யனின் பெற்றோர் இருவரும் மேற்கு அவுஸ்திரேலியாவில் தாயார் கிருஷ்ணா இணைய பாதுகாப்பு நிபுணர் மற்றும் தந்தை அனீஷ் தொலைத்தொடர்பு துறையில் முக்கிய பணியில் உள்ளார்.

இந்த பின்னணியில ஆர்யனின் குடும்பம் அவுஸ்திரேலியாவில் இருப்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி, People With Disability Australia பொருளாளர் சுரேஷ் ராஜன் திங்களன்று அமைச்சர் Andrew Gilesக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட மகன் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இந்தியக் குடும்பம் SamugamMedia மேற்கு அவுஸ்திரேலியா பெர்த்தில் வாழ்ந்துவரும் இந்திய குடும்பத்தினர் அவர்களது மகனது நோய்நிலைமை காரணமாக நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளனர். இந்தியா கேரளாவைச் சேர்ந்த அனீஷ் கொல்லிக்கரா மற்றும் கிருஷ்ணா அனீஷ் தம்பதியர் தமது இரு குழந்தைகளுடன் கடந்த 7 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில், 10 வயது மகன் ஆர்யனுக்கு Down syndrome எனும் நோய் நிலைமை உள்ளமையினாலும், மருத்துவ செலவுகள் அதிகம் என்பதாலும், குழந்தை வரி செலுத்துவோருக்கு சுமையாக கருதப்படுவதாலும் இந்திய சிறுவனுக்காக அவர்களது குடும்பத்தின் நிரந்தரமாக தங்குவதற்கான விசாவை அரசாங்கம் ரத்து செய்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதனையடுத்து இக்குடும்பம் இரண்டு வாரங்களுக்குள் நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளது.இந்நிலையில் குடிவரவு அமைச்சின் இச்செயல் மனிதாபிமானமற்றது என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.ஆர்யனின் பெற்றோர் இருவரும் மேற்கு அவுஸ்திரேலியாவில் தாயார் கிருஷ்ணா இணைய பாதுகாப்பு நிபுணர் மற்றும் தந்தை அனீஷ் தொலைத்தொடர்பு துறையில் முக்கிய பணியில் உள்ளார்.இந்த பின்னணியில ஆர்யனின் குடும்பம் அவுஸ்திரேலியாவில் இருப்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி, People With Disability Australia பொருளாளர் சுரேஷ் ராஜன் திங்களன்று அமைச்சர் Andrew Gilesக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement