• May 02 2024

பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக படகில் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை SamugamMedia

Chithra / Mar 6th 2023, 7:02 am
image

Advertisement

சட்டவிரோதமாக சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்குள் செல்பவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடத்துக்குள் உள்ளது.

2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் பிரித்தானிய விசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

தரவுகளின் அடிப்படையில், கல்விக்கான விசாவில் குடும்ப உறுப்பினர்களுடன் செல்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிரித்தானியாவுக்கு பிரவேசிக்கும் சகலருக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது என புலம்பெயர் கண்காணிப்பகம் குறிப்பிட்டிருந்தது.

இந்த பின்னணியில் பிரித்தானியா தங்களது குடிவரவு மற்றும் குடியகல்வு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.


இந்தநிலையில், புதிய திருத்தங்களுடன் இந்த விடயம் தொடர்பான சட்ட மூலம் அந்த நாட்டு உள்துறை செயலாளர் சுவெல்ல பிரேவமானினால் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த செயல்பாட்டிற்கு அமைச்சர்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தமது ஐந்து முன்னுரிமை நடவடிக்கைகளில், ‘படகுகளை கட்டுப்படுத்தல்’ என்ற விடயத்தையும் உள்ளடக்கியுள்ளார்.

சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் வருபவர்கள் அங்கு தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய செஞ்சிலுவை சங்கம் இந்த திட்டம் மனிதாபிமான முறையில் எதிர்கொள்ள வேண்டியது என தெரிவித்துள்ளதுடன், அது கவலையளிக்கும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக படகில் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை SamugamMedia சட்டவிரோதமாக சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்குள் செல்பவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடத்துக்குள் உள்ளது.2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் பிரித்தானிய விசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.தரவுகளின் அடிப்படையில், கல்விக்கான விசாவில் குடும்ப உறுப்பினர்களுடன் செல்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பிரித்தானியாவுக்கு பிரவேசிக்கும் சகலருக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது என புலம்பெயர் கண்காணிப்பகம் குறிப்பிட்டிருந்தது.இந்த பின்னணியில் பிரித்தானியா தங்களது குடிவரவு மற்றும் குடியகல்வு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.இந்தநிலையில், புதிய திருத்தங்களுடன் இந்த விடயம் தொடர்பான சட்ட மூலம் அந்த நாட்டு உள்துறை செயலாளர் சுவெல்ல பிரேவமானினால் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த செயல்பாட்டிற்கு அமைச்சர்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தமது ஐந்து முன்னுரிமை நடவடிக்கைகளில், ‘படகுகளை கட்டுப்படுத்தல்’ என்ற விடயத்தையும் உள்ளடக்கியுள்ளார்.சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் வருபவர்கள் அங்கு தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.இதேவேளை, பிரித்தானிய செஞ்சிலுவை சங்கம் இந்த திட்டம் மனிதாபிமான முறையில் எதிர்கொள்ள வேண்டியது என தெரிவித்துள்ளதுடன், அது கவலையளிக்கும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement