• May 10 2024

இலங்கைக்கு சுற்றுலா வந்த இத்தாலிய மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை! SamugamMedia

Chithra / Mar 6th 2023, 7:07 am
image

Advertisement

இத்தாலிய இளம் மருத்துவர் ஒருவரிடம் இருந்து ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான அப்பிள் கையடக்கத் தொலைபேசியை திருடிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக கண்டி தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டிற்கு விஜயம் செய்த இத்தாலிய மருத்துவர் கண்டி சென்று பின்னர் முச்சக்கரவண்டியில் ஸ்ரீ தலதா மாளிகையை பார்வையிட சென்றதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


முச்சக்கரவண்டி சாரதியை அவர் திரும்பும் வரை காத்திருக்குமாறு மருத்துவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அப்பிள் கைபேசியை மறதி காரணமாக மருத்துவர் முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது முச்சக்கரவண்டி சாரதியைக் காணவில்லை என இத்தாலிய இளம் மருத்துவர் கண்டி காவல்துறையின் சுற்றுலாப் பிரிவில் முறைப்பாடு செய்ததுடன் கையடக்கத் தொலைபேசியை எடுத்துக் கொண்டு சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு முச்சக்கர வண்டி சாரதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் அவரிடமிருந்து தெரியவந்த தகவலின் அடிப்படையில் இத்தாலி மருத்துவரிடம் இருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு சுற்றுலா வந்த இத்தாலிய மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை SamugamMedia இத்தாலிய இளம் மருத்துவர் ஒருவரிடம் இருந்து ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான அப்பிள் கையடக்கத் தொலைபேசியை திருடிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக கண்டி தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.நாட்டிற்கு விஜயம் செய்த இத்தாலிய மருத்துவர் கண்டி சென்று பின்னர் முச்சக்கரவண்டியில் ஸ்ரீ தலதா மாளிகையை பார்வையிட சென்றதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.முச்சக்கரவண்டி சாரதியை அவர் திரும்பும் வரை காத்திருக்குமாறு மருத்துவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த அப்பிள் கைபேசியை மறதி காரணமாக மருத்துவர் முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது முச்சக்கரவண்டி சாரதியைக் காணவில்லை என இத்தாலிய இளம் மருத்துவர் கண்டி காவல்துறையின் சுற்றுலாப் பிரிவில் முறைப்பாடு செய்ததுடன் கையடக்கத் தொலைபேசியை எடுத்துக் கொண்டு சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு முச்சக்கர வண்டி சாரதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் அவரிடமிருந்து தெரியவந்த தகவலின் அடிப்படையில் இத்தாலி மருத்துவரிடம் இருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement