• Sep 22 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை சரிபார்க்கும் பணிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

Chithra / Aug 18th 2024, 8:39 am
image

Advertisement

 

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு முன்னரான சரிபார்ப்பு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. 

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டை அச்சிடுவதற்கான உத்தரவு அடுத்த சில தினங்களில் அரச அச்சகத்துக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

இதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க,

தேர்தலுக்காக மதிப்பிடப்பட்ட ஒதுக்கீடு போதுமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

கடந்த முறையை விட தற்போது வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

அதற்கமைய வாக்குச்சீட்டின் நீளம் 27 அங்குலம் வரை அதிகரித்துள்ளதுடன் ஒரே பக்கத்தில் வாக்குச்சீட்டை அச்சிட முடியும்.

எனவே, வாக்குச்சீட்டுக்கான செலவு மதிப்பிடப்பட்ட செலவினத்தை விடவும் அதிகரிக்கும். 

எனினும் மதிப்பிடப்பட்ட ஒதுக்கீட்டிற்குள் குறித்த அச்சிடல் பணிகளை முன்னெடுக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச கண்காணிப்புக் குழுக்கள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை சரிபார்க்கும் பணிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு  எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு முன்னரான சரிபார்ப்பு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டை அச்சிடுவதற்கான உத்தரவு அடுத்த சில தினங்களில் அரச அச்சகத்துக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க,தேர்தலுக்காக மதிப்பிடப்பட்ட ஒதுக்கீடு போதுமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். கடந்த முறையை விட தற்போது வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கமைய வாக்குச்சீட்டின் நீளம் 27 அங்குலம் வரை அதிகரித்துள்ளதுடன் ஒரே பக்கத்தில் வாக்குச்சீட்டை அச்சிட முடியும்.எனவே, வாக்குச்சீட்டுக்கான செலவு மதிப்பிடப்பட்ட செலவினத்தை விடவும் அதிகரிக்கும். எனினும் மதிப்பிடப்பட்ட ஒதுக்கீட்டிற்குள் குறித்த அச்சிடல் பணிகளை முன்னெடுக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச கண்காணிப்புக் குழுக்கள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement