• Nov 17 2024

பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் செயற்பாடுகள் ஆரம்பம்

Chithra / Nov 13th 2024, 8:42 am
image

 

நாளை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாடு இன்று இடம்பெற்றுவருகின்றது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். 

இன்று காலை 9 மணி முதல் மாவட்ட செயலகங்களிலிருந்து குறித்த வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. 

விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வாக்குப்பெட்டிகள் பிரதான வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

23 கட்சிகளும், 25 சுயேட்சை குழுக்களுமாக மொத்தமாக இம்முறை வன்னி தேர்தல் தொகுதியில் 432 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து இன்றுகாலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலில் 1653 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 500 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் செயற்பாடுகள் ஆரம்பம்  நாளை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாடு இன்று இடம்பெற்றுவருகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணி முதல் மாவட்ட செயலகங்களிலிருந்து குறித்த வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வாக்குப்பெட்டிகள் பிரதான வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.23 கட்சிகளும், 25 சுயேட்சை குழுக்களுமாக மொத்தமாக இம்முறை வன்னி தேர்தல் தொகுதியில் 432 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து இன்றுகாலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குறித்த தேர்தலில் 1653 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 500 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement