• Jan 19 2025

கடன்களை திருப்பிச் செலுத்த விசேட சலுகை - அரசு திட்டம்

Chithra / Jan 17th 2025, 7:43 am
image

 

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிவாரணப் பொதி, இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கிகள் சங்கம், SME துறையின் பிரதிநிதிகள் மற்றும் வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் அதே வேளையில் பாதிக்கப்பட்ட  வணிக நடவடிக்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 01.04.2019 அன்று அல்லது அதற்குப் பிறகு, நிலை 3 பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்ட MSMEகள் உரிமம் பெற்ற வங்கியிடமிருந்து கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், 31.03.2025 அன்று அல்லது அதற்கு முன்னர் அனைத்து தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட சலுகை வங்கிப் பிரிவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்மொழியப்பட்ட நிவாரணப் பொதியில் சேரத் தகுதியுடையவையாக ஏற்றுக்கொள்ளப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன்களை திருப்பிச் செலுத்த விசேட சலுகை - அரசு திட்டம்  கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இந்த நிவாரணப் பொதி, இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கிகள் சங்கம், SME துறையின் பிரதிநிதிகள் மற்றும் வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் அதே வேளையில் பாதிக்கப்பட்ட  வணிக நடவடிக்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 01.04.2019 அன்று அல்லது அதற்குப் பிறகு, நிலை 3 பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்ட MSMEகள் உரிமம் பெற்ற வங்கியிடமிருந்து கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என கூறப்பட்டுள்ளது.மேலும், 31.03.2025 அன்று அல்லது அதற்கு முன்னர் அனைத்து தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட சலுகை வங்கிப் பிரிவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்மொழியப்பட்ட நிவாரணப் பொதியில் சேரத் தகுதியுடையவையாக ஏற்றுக்கொள்ளப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement