• Nov 28 2024

பட்ஜெட் நிதியினை கையாள்வது தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கலந்துரையாடல்...!samugammedia

Sharmi / Jan 30th 2024, 1:54 pm
image

2024 வருடத்திற்குரிய வரவு செலவுத்திட்டத்தினூடாக முறையான கிராமிய அபிவிருத்தி மூலம் பிரதேச ஏற்றத் தாழ்வுகளை குறைத்து நாட்டின் நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டதுடன் வலுவான கிராமிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமாக பாரிய பொருளாதார இலக்கினை அடைந்து தேசிய பணிக்கு பங்களிப்பு செய்தல் எனும் நோக்கில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 115 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான அதிகாரிகளை தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் இன்று (30) காலை 11.30 க்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி தலைமையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் பங்குபற்றுதலுடன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

நிரல் அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் பிற நிறுவனங்களினால் நிதி ஒதுக்கப்படாத பொருளாதார, சமூக, சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்குத் தேவையான பெளதீக உட்கட்டமைப்பை உருவாக்குதல் அல்லது சமூக நலனை இலக்காக கொண்ட கருத்திட்டங்களிற்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டதத்ன் கீழ் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளை முறையாக முதலீடு செய்தலை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

குறித்த கலந்துரையாடலில் கல்வி, சுகாதாரம், விவசாய, கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள் கிராம அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் குறித்து நிதிகளை எந்தெந்த வகையில் பயன்படுத்த முடியும் எவ்வாறான வேலைத்திட்டங்களை தெரிவு செய்வது போன்ற விளக்கங்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.


பட்ஜெட் நிதியினை கையாள்வது தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கலந்துரையாடல்.samugammedia 2024 வருடத்திற்குரிய வரவு செலவுத்திட்டத்தினூடாக முறையான கிராமிய அபிவிருத்தி மூலம் பிரதேச ஏற்றத் தாழ்வுகளை குறைத்து நாட்டின் நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டதுடன் வலுவான கிராமிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமாக பாரிய பொருளாதார இலக்கினை அடைந்து தேசிய பணிக்கு பங்களிப்பு செய்தல் எனும் நோக்கில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 115 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுஇது தொடர்பான அதிகாரிகளை தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் இன்று (30) காலை 11.30 க்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி தலைமையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் பங்குபற்றுதலுடன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.நிரல் அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் பிற நிறுவனங்களினால் நிதி ஒதுக்கப்படாத பொருளாதார, சமூக, சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்குத் தேவையான பெளதீக உட்கட்டமைப்பை உருவாக்குதல் அல்லது சமூக நலனை இலக்காக கொண்ட கருத்திட்டங்களிற்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டதத்ன் கீழ் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளை முறையாக முதலீடு செய்தலை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.குறித்த கலந்துரையாடலில் கல்வி, சுகாதாரம், விவசாய, கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள் கிராம அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.இந்த கலந்துரையாடலில் குறித்து நிதிகளை எந்தெந்த வகையில் பயன்படுத்த முடியும் எவ்வாறான வேலைத்திட்டங்களை தெரிவு செய்வது போன்ற விளக்கங்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement