• Sep 17 2024

வவுனியாவில் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Sharmi / Dec 29th 2022, 5:36 pm
image

Advertisement

வவுனியா மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே அவர்களின் எண்ணக்கருவில் வீதி விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகள் , மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொருப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

வவுனியா - மன்னார் வீதியில் வேகக்கட்டுப்பாட்டு பலகை அமைத்தல் , ஏ9 வீதியிலுள்ள பாலங்களின் பாதுகாப்பு கட்டு அமைத்தல் , பொலிஸ் விசேட பரிசோதனை நடவடிக்கை , வீதி செப்பனிடும் பணி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன்  விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.



வவுனியாவில் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே அவர்களின் எண்ணக்கருவில் வீதி விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகள் , மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொருப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.வவுனியா - மன்னார் வீதியில் வேகக்கட்டுப்பாட்டு பலகை அமைத்தல் , ஏ9 வீதியிலுள்ள பாலங்களின் பாதுகாப்பு கட்டு அமைத்தல் , பொலிஸ் விசேட பரிசோதனை நடவடிக்கை , வீதி செப்பனிடும் பணி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன்  விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement