• Nov 28 2024

பாடசாலை கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு..!

Chithra / Feb 5th 2024, 7:37 am
image

 

அரச மற்றும் அரச அனுசரணையிலான தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக பாடசாலை விடுமுறை, கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், உயர்தர பரீட்சை காலத்தின் போது, விவசாய பாடத்திற்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியானதையடுத்து, அந்த பாடத்திற்கான பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதற்கமைய, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவிருந்த அரச மற்றும் அரச அனுசரணையிலான தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டன.

இதேவேளை, அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று வழமை போல இயங்கும் என பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் சுதந்திர தினம், விடுமுறை நாளில் கொண்டாடப்பட்டதால், இன்றைய தினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சிலர் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் இன்றைய தினம் அரச விடுமுறை தினம் அல்லவென பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு.  அரச மற்றும் அரச அனுசரணையிலான தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக பாடசாலை விடுமுறை, கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.எனினும், உயர்தர பரீட்சை காலத்தின் போது, விவசாய பாடத்திற்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியானதையடுத்து, அந்த பாடத்திற்கான பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.அதற்கமைய, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவிருந்த அரச மற்றும் அரச அனுசரணையிலான தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டன.இதேவேளை, அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று வழமை போல இயங்கும் என பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வருடம் சுதந்திர தினம், விடுமுறை நாளில் கொண்டாடப்பட்டதால், இன்றைய தினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சிலர் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.எனினும் இன்றைய தினம் அரச விடுமுறை தினம் அல்லவென பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement