• Sep 17 2024

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

Chithra / Dec 31st 2022, 8:08 pm
image

Advertisement

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (2) முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 23ஆம் திகதி முதல் நாளை வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

அதனை தொடர்ந்து, கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை நிமித்தம் எதிர்வரும் ஜனவரி  21ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.


உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர், பெப்ரவரி 20ஆம் திகதி மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி, மார்ச் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

அதற்கமைய 2022ஆம் ஆண்டுக்கான இறுதி தவணை கல்வி நடவடிக்கைகள் மார்ச் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் தினம் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (2) முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நத்தார் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 23ஆம் திகதி முதல் நாளை வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.அதனை தொடர்ந்து, கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை நிமித்தம் எதிர்வரும் ஜனவரி  21ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர், பெப்ரவரி 20ஆம் திகதி மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி, மார்ச் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.அதற்கமைய 2022ஆம் ஆண்டுக்கான இறுதி தவணை கல்வி நடவடிக்கைகள் மார்ச் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் தினம் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement