• May 18 2024

ரயில் சேவை குறித்து பயணிகளுக்கு வெளியான விசேட அறிவித்தல் samugammedia

Chithra / Aug 24th 2023, 8:30 am
image

Advertisement

பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இன்று (24) ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (23) பிற்பகல், புகையிரத கட்டுப்பாட்டாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் புகையிரத மின்சார உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார ஊழியர்கள் குழுவொன்று அவசர தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக நேற்றிரவு அனைத்து புகையிரத பாதைகளிலும் புகையிரத தாமதம் ஏற்பட்டதாகவும், அங்கு பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.

இருப்பினும் ரயில்வே அதிகாரிகள் தலையிட்டு ரயில் சேவையினை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததையடுத்து ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.

இதேவேளை, இன்றைய தினம் சிறந்த முறையில் ரயில்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க ரயில் தாமதங்களைத் தவிர்த்து அனைத்து ரயில்களையும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, நிறுவனத்தின் நடைமுறைகளை பின்பற்றாத ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


ரயில் சேவை குறித்து பயணிகளுக்கு வெளியான விசேட அறிவித்தல் samugammedia பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இன்று (24) ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.நேற்று (23) பிற்பகல், புகையிரத கட்டுப்பாட்டாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் புகையிரத மின்சார உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார ஊழியர்கள் குழுவொன்று அவசர தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.இதன் காரணமாக நேற்றிரவு அனைத்து புகையிரத பாதைகளிலும் புகையிரத தாமதம் ஏற்பட்டதாகவும், அங்கு பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.இருப்பினும் ரயில்வே அதிகாரிகள் தலையிட்டு ரயில் சேவையினை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததையடுத்து ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.இதேவேளை, இன்றைய தினம் சிறந்த முறையில் ரயில்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க ரயில் தாமதங்களைத் தவிர்த்து அனைத்து ரயில்களையும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.இதேவேளை, நிறுவனத்தின் நடைமுறைகளை பின்பற்றாத ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement