• Nov 25 2024

தட்டம்மை தடுப்பூசி தொடர்பில் மக்களுக்கு விசேட அறிவித்தல்..!samugammedia

mathuri / Jan 4th 2024, 9:57 am
image

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

“கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, காலி, கல்முனை ஆகிய 09 மாவட்டங்களை உள்ளடக்கி எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த தகவலை தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சிறு குழந்தைக்கு அம்மை நோய் வந்தால் அது நீண்டகாலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது தடுப்பூசியின் மேலதிக டோஸ் ஆகும். வயது பூர்த்தியடையும் போது பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசியை கட்டாயமாக பெற வேண்டும்." என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


தட்டம்மை தடுப்பூசி தொடர்பில் மக்களுக்கு விசேட அறிவித்தல்.samugammedia 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.“கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, காலி, கல்முனை ஆகிய 09 மாவட்டங்களை உள்ளடக்கி எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.குறித்த தகவலை தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,சிறு குழந்தைக்கு அம்மை நோய் வந்தால் அது நீண்டகாலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது தடுப்பூசியின் மேலதிக டோஸ் ஆகும். வயது பூர்த்தியடையும் போது பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசியை கட்டாயமாக பெற வேண்டும்." என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement