• May 11 2025

டெங்கு, சிக்குன்குனியா நோய்களை கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம்

Chithra / May 11th 2025, 8:53 am
image


டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான அடிப்படை நடைமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அழைப்பின் பேரில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் குறித்து ஆராய, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமையில், சுகாதார அமைச்சில் சிறப்புக் கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது, இரத்தினபுரி மருத்துவமனை தொடர்பாக சமீபத்திய நாட்களில் அறிவிக்கப்பட்ட நிலைமை மற்றும் ஆபத்து நிறைந்த மாவட்டங்களின் தற்போதைய நிலைமை ஆகியவை மிக ஆழமாக ஆராயப்பட்டன.

குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்குக் தெளிவு படுத்துவதற்கு திட்டங்களை மிக விரைவாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், இந்த மாதம்  சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு, சிக்குன்குனியா நோய்களை கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான அடிப்படை நடைமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அழைப்பின் பேரில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் குறித்து ஆராய, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமையில், சுகாதார அமைச்சில் சிறப்புக் கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலின் போது, இரத்தினபுரி மருத்துவமனை தொடர்பாக சமீபத்திய நாட்களில் அறிவிக்கப்பட்ட நிலைமை மற்றும் ஆபத்து நிறைந்த மாவட்டங்களின் தற்போதைய நிலைமை ஆகியவை மிக ஆழமாக ஆராயப்பட்டன.குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்குக் தெளிவு படுத்துவதற்கு திட்டங்களை மிக விரைவாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், இந்த மாதம்  சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement