• May 19 2025

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்! சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Chithra / May 19th 2025, 8:09 am
image

 

16 ஆவது தேசிய போர் வீரர் நினைவு விழாவினை முன்னிட்டு, கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள நாடாளுமன்றப் பகுதியைச் சுற்றி இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது.

அதன்படி, குறித்த காலகட்டத்தில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உள்நாட்டு போர் வெற்றியின் 16 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இன்று நடைபெறும் தேசிய போர்வீரர் தின கொண்டாட்டங்களானது ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான அனுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் நடைபெறும்.

இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,போரின் இறுதிக் கட்டத்தில் முப்படைகளையும் வழிநடத்திய விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலக உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு  16 ஆவது தேசிய போர் வீரர் நினைவு விழாவினை முன்னிட்டு, கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள நாடாளுமன்றப் பகுதியைச் சுற்றி இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது.அதன்படி, குறித்த காலகட்டத்தில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.உள்நாட்டு போர் வெற்றியின் 16 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இன்று நடைபெறும் தேசிய போர்வீரர் தின கொண்டாட்டங்களானது ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான அனுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் நடைபெறும்.இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,போரின் இறுதிக் கட்டத்தில் முப்படைகளையும் வழிநடத்திய விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலக உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement