புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக விசேட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகள் இன்று முதல் 21 ஆம் திகதி வரை இயக்கப்படும் என்று திணைக்களத்தின் பிரதிப் பொது மேலாளர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, பதுளை, பெலியத்த, காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களிலிருந்து கொழும்புக்கு இந்த ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களின் பயணத்திற்காக இன்று (18) முதல் 13 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த விசேட ரயில் சேவைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு இயக்கப்படும்.
அதன்படி, இந்த விசேட ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி, கம்பளை மற்றும் கடுகண்ணாவை ஆகிய இடங்களிலிருந்து கண்டி வரை இயக்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
விசேட ரயில்கள் சேவைகள் ஏற்பாடு வெளியான அறிவிப்பு புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக விசேட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விசேட ரயில் சேவைகள் இன்று முதல் 21 ஆம் திகதி வரை இயக்கப்படும் என்று திணைக்களத்தின் பிரதிப் பொது மேலாளர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.அதன்படி, பதுளை, பெலியத்த, காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களிலிருந்து கொழும்புக்கு இந்த ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களின் பயணத்திற்காக இன்று (18) முதல் 13 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி இந்த விசேட ரயில் சேவைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு இயக்கப்படும்.அதன்படி, இந்த விசேட ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி, கம்பளை மற்றும் கடுகண்ணாவை ஆகிய இடங்களிலிருந்து கண்டி வரை இயக்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.