• Nov 28 2024

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பத்தால் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Feb 23rd 2024, 1:03 pm
image

 

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருவதுடன், அது மேலும் ஒரு மாதத்துக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி நீர் விநியோகமும் துண்டிக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களு ஆராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான முக்கியமான நீர் ஆதாரமான களனி ஆற்றின் நீர் மட்டம் குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாட்டில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு பாரியளவில் குறைவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மலையகத்திலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்களான லக்சபான, விமலசுரேந்திரா, காசல்ரீ, நேர்டன் மற்றும் மவுசாகலை உட்பட பல்வேறு நீர்த்தேக்களில் நீரின் மட்டம் குறைந்துள்ளது.

அதேபோன்று வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஏனைய மாகாணங்களிலும் இம்முறை மழை வீழ்ச்சி குறைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பத்தால் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம். விடுக்கப்பட்ட எச்சரிக்கை  நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் முதல் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருவதுடன், அது மேலும் ஒரு மாதத்துக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி நீர் விநியோகமும் துண்டிக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களு ஆராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான முக்கியமான நீர் ஆதாரமான களனி ஆற்றின் நீர் மட்டம் குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், நாட்டில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு பாரியளவில் குறைவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மலையகத்திலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்களான லக்சபான, விமலசுரேந்திரா, காசல்ரீ, நேர்டன் மற்றும் மவுசாகலை உட்பட பல்வேறு நீர்த்தேக்களில் நீரின் மட்டம் குறைந்துள்ளது.அதேபோன்று வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஏனைய மாகாணங்களிலும் இம்முறை மழை வீழ்ச்சி குறைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement