• Apr 26 2024

இலங்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு ஜூலை முதல் தடை! SamugamMedia

Chithra / Mar 23rd 2023, 7:43 am
image

Advertisement

பிளாஸ்டிக் மாசுபாடு இலங்கையில் முக்கிய உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐந்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடுவதை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒருமுறை மாத்திரமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.


அதன்படி, ஜூன் மாதம் முதல் பிளாஸ்டிக் கப், ஸ்பூன், தட்டுகள், முட்கரண்டி, மாலைகள் மற்றும் பாய்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

நாட்டில் தேவைக்கு அதிகமாக இருப்புக்கள் இருப்பதால், பிளாஸ்டிக் துகள்களின் இறக்குமதியை அமைச்சு கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தட்டுகளை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தவும், பசுமைப் பொருட்களை மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்பதற்காகவும் அமைச்சு எதிர்பார்த்துள்ளது.


மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம், சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை பயன்படுத்தி இத்தொழிலை தொடங்க காத்திருப்போரை ஊக்குவிக்கும். இது மக்களின் வாழ்க்கைக்கு உதவும்.

சந்தை தேவை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து ஏனைய நாடுகளில் இருந்து சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, ​​அமைச்சு முடிந்தவரை பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சூழலை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு ஜூலை முதல் தடை SamugamMedia பிளாஸ்டிக் மாசுபாடு இலங்கையில் முக்கிய உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐந்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடுவதை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.ஒருமுறை மாத்திரமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.அதன்படி, ஜூன் மாதம் முதல் பிளாஸ்டிக் கப், ஸ்பூன், தட்டுகள், முட்கரண்டி, மாலைகள் மற்றும் பாய்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.நாட்டில் தேவைக்கு அதிகமாக இருப்புக்கள் இருப்பதால், பிளாஸ்டிக் துகள்களின் இறக்குமதியை அமைச்சு கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் தட்டுகளை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தவும், பசுமைப் பொருட்களை மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்பதற்காகவும் அமைச்சு எதிர்பார்த்துள்ளது.மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம், சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை பயன்படுத்தி இத்தொழிலை தொடங்க காத்திருப்போரை ஊக்குவிக்கும். இது மக்களின் வாழ்க்கைக்கு உதவும்.சந்தை தேவை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து ஏனைய நாடுகளில் இருந்து சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, ​​அமைச்சு முடிந்தவரை பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சூழலை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement