• May 18 2024

இலங்கையில் கோழி இறைச்சி விலையால் தொடரும் குழப்பம்..! samugammedia

Chithra / Jun 13th 2023, 9:59 am
image

Advertisement

கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரம் முதல் கோழி இறைச்சி கொள்வனவை புறக்கணிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

பிஸ்கட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எந்த வழிவகை கையாளப்பட்டதோ, அந்த வழிவகை கோழி இறைச்சி விடயத்திலும் கையாளப்படும் என்று அந்த அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

டொலர் மதிப்பிழப்பால் கிடைக்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என கோழி இறைச்சி வியாபாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.

எனினும் தற்போதுள்ள இக்கட்டான சூழலை பயன்படுத்தி அதிக இலாபம் ஈட்டுவதற்கு வியாபாரிகள் முயற்சிக்கின்றனர்.

இதேவேளை, அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இறக்குமதி செய்யப்பட்ட பழங்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோகிராம் திராட்சைப்பழம் 2 ஆயிரத்து 690 ரூபாவாகவும், ஒரு கிலோ ஆப்பிள் 2 ஆயிரத்து 500 ரூபாவாகவும் விற்பனையாகின்றன.

அத்துடன் உள்ளுர் பழ வகைகளின் விலையும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் கோழி இறைச்சி விலையால் தொடரும் குழப்பம். samugammedia கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரம் முதல் கோழி இறைச்சி கொள்வனவை புறக்கணிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.பிஸ்கட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எந்த வழிவகை கையாளப்பட்டதோ, அந்த வழிவகை கோழி இறைச்சி விடயத்திலும் கையாளப்படும் என்று அந்த அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.டொலர் மதிப்பிழப்பால் கிடைக்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என கோழி இறைச்சி வியாபாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.எனினும் தற்போதுள்ள இக்கட்டான சூழலை பயன்படுத்தி அதிக இலாபம் ஈட்டுவதற்கு வியாபாரிகள் முயற்சிக்கின்றனர்.இதேவேளை, அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இறக்குமதி செய்யப்பட்ட பழங்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஒரு கிலோகிராம் திராட்சைப்பழம் 2 ஆயிரத்து 690 ரூபாவாகவும், ஒரு கிலோ ஆப்பிள் 2 ஆயிரத்து 500 ரூபாவாகவும் விற்பனையாகின்றன.அத்துடன் உள்ளுர் பழ வகைகளின் விலையும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement