• May 18 2024

இறுதிப் போட்டியிலும் படு தோல்வியுடன் வெளியேறிய இலங்கை அணி! samugammedia

Tamil nila / Nov 9th 2023, 8:38 pm
image

Advertisement

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற முதற் சுற்றின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 51 ஓட்டங்களையும், மஹீஷ் தீக்ஷன 38 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் Trent Boult மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

நியூசிலாந்து அணி சார்பில் Devon Conway 45 ஓட்டங்களையும், Rachin Ravindra 42 ஓட்டங்களையும் மற்றும் Daryl Mitchell  43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக Trent Boult தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியை தொடர்ந்து 10 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 4 இடத்தை பெற்றுள்ள நிலையில் அரையிறுதிக்கான அதிக வாய்ப்பை பெற்றுள்ளது.



இறுதிப் போட்டியிலும் படு தோல்வியுடன் வெளியேறிய இலங்கை அணி samugammedia 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற முதற் சுற்றின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 51 ஓட்டங்களையும், மஹீஷ் தீக்ஷன 38 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.பந்து வீச்சில் Trent Boult மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.அதன்படி, 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.நியூசிலாந்து அணி சார்பில் Devon Conway 45 ஓட்டங்களையும், Rachin Ravindra 42 ஓட்டங்களையும் மற்றும் Daryl Mitchell  43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.பந்து வீச்சில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.போட்டியின் ஆட்ட நாயகனாக Trent Boult தெரிவு செய்யப்பட்டார்.இந்த வெற்றியை தொடர்ந்து 10 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 4 இடத்தை பெற்றுள்ள நிலையில் அரையிறுதிக்கான அதிக வாய்ப்பை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement