• Sep 17 2024

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகள் அறிமுகம்! SamugamMedia

Chithra / Feb 28th 2023, 4:48 pm
image

Advertisement


இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வர்த்தக நகரமான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாக கொண்டு இலங்கை போக்குவரத்து சபையினால் மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன்படி, முறையான சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் ஒரு பரீட்சார்த்த திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகள் அறிமுகம் SamugamMedia இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.வெளிநாட்டில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.வர்த்தக நகரமான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாக கொண்டு இலங்கை போக்குவரத்து சபையினால் மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.இதன்படி, முறையான சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் ஒரு பரீட்சார்த்த திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement