• May 12 2024

இலங்கை ஒரு சபிக்கப்பட்ட தேசம்- சந்தியா எக்னலிகொட ஆவேசம்!

Sharmi / Dec 31st 2022, 7:40 am
image

Advertisement

இலங்கை ஒரு சபிக்கப்பட்ட தேசம் குவேனி காலத்திலிருந்தே சபிக்கப்பட்ட தேசம் என சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை ஒரு சபிக்கப்பட்ட தேசம்,குவேனியின் காலம் முதல் பெண்கள் இந்த நாட்டை சபித்துள்ளனர்.அரசியல் அதிகாரத்திற்கு வந்த அனைவரும் இந்த நாட்டின் பெண்களின் மகிழ்ச்சியை பறித்துள்ளனர்.

தங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என்பதை அறிந்ததும் பெண்கள் இந்த நாட்டை சபித்துள்ளனர்.இந்த நாடு இந்த சாபங்களில் இருந்து விடுபடாது, இந்த நாடு சாபங்களில் இருந்து விடுபடவேண்டும் என்றால் பெண்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும்.

தற்போதைய அரசாங்கம் கூட காணாமல் போனவர்கள் விடயத்தில் அவர்களது குடும்பத்தவர்களிற்கு நீதியை நிலைநாட்டவேண்டியது தனது கடமை என கருதவில்லை. உண்மையில் எந்த அரசாங்கமும் இது தனது கடமை என கருதவில்லை.

அவர்கள் தங்களால் ஐநாவையும் உலக நாடுகளையும் ஏமாற்ற முடியும் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக எதனையும் செய்யவேண்டியதில்லை என கருதினார்கள்.இதற்கும் மேலாக அவர்கள் ஐ.நாவின் தீர்மானங்களை  ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை என தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஒரு சபிக்கப்பட்ட தேசம்- சந்தியா எக்னலிகொட ஆவேசம் இலங்கை ஒரு சபிக்கப்பட்ட தேசம் குவேனி காலத்திலிருந்தே சபிக்கப்பட்ட தேசம் என சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,இலங்கை ஒரு சபிக்கப்பட்ட தேசம்,குவேனியின் காலம் முதல் பெண்கள் இந்த நாட்டை சபித்துள்ளனர்.அரசியல் அதிகாரத்திற்கு வந்த அனைவரும் இந்த நாட்டின் பெண்களின் மகிழ்ச்சியை பறித்துள்ளனர்.தங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என்பதை அறிந்ததும் பெண்கள் இந்த நாட்டை சபித்துள்ளனர்.இந்த நாடு இந்த சாபங்களில் இருந்து விடுபடாது, இந்த நாடு சாபங்களில் இருந்து விடுபடவேண்டும் என்றால் பெண்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும்.தற்போதைய அரசாங்கம் கூட காணாமல் போனவர்கள் விடயத்தில் அவர்களது குடும்பத்தவர்களிற்கு நீதியை நிலைநாட்டவேண்டியது தனது கடமை என கருதவில்லை. உண்மையில் எந்த அரசாங்கமும் இது தனது கடமை என கருதவில்லை.அவர்கள் தங்களால் ஐநாவையும் உலக நாடுகளையும் ஏமாற்ற முடியும் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக எதனையும் செய்யவேண்டியதில்லை என கருதினார்கள்.இதற்கும் மேலாக அவர்கள் ஐ.நாவின் தீர்மானங்களை  ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement