• Feb 27 2025

பாதாள உலக கோஷ்டியினரின் நாடாக மாறிவரும் இலங்கை; சபையில் தயாசிறி சுட்டிக்காட்டு..!

Sharmi / Feb 27th 2025, 5:16 pm
image

இலங்கையானது தற்போது  பாதாள உலக கோஷ்டியினரின் நாடாக மாறிவருவதாக  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு தற்போது செயலிழந்துள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்றில் கேள்வியெழுப்பிய போது பிமல் ரட்ணாயக்க எனக்கு தடையேற்படுத்தினார்.

அதன்பின்னர், நளிந்த ஜயதிஸ்ஸவும் இது எமக்கு தேவையில்லாத விடயம் என்று அன்று எமக்கு  எதிராக குற்றம் சுமத்தினார்கள்.

அதேவேளை, கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 09ற்கு கூட்டி வர வேண்டிய நபரை நீதிமன்றத்திலே காலை வேளையிலே பூசா பிரதேசத்திலிருந்து கொண்டு வரும்  போது அந்த 9 நீதிமன்றம் என்பது எந்தவொரு ஆயுதத்தையும் வெளியில் எடுக்ககக்கூடிய முற்றாக சனநெரிசல் மிகுந்த நீதிமன்றமாக காணப்படுகின்றது.

எனவே, அந்த நீதிமன்றத்தின் நீதிபதி வராமல் இருக்க, அதாவது 5 என்பது நுகர்வோர் விவகார பாதுகாப்பு தொடர்பான வழக்குகளே அங்கு விசாரிக்கப்படும்.

அங்கு போதுமான இடவசதிகள் காணப்படுகின்றன. எனவே துப்பாக்கி எவ்வாறு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஏன் குறித்த நபர் ஐந்தாவது நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். இதற்கு காரணமாக இருந்தவர் யார்? என வினவப்பட்டது.

இதனடிப்படையிலேயே நான் கேட்கின்றேன் நீதித்துறையில் சில தொடர்புகள் இங்கு இருக்கின்றது. சிறைச்சாலை, பொலிஸார் ஆகியோர் ஒன்றிணைந்தே பணியாற்றுகின்றனர்.

இப்போது பாதாள உலகத்தினர் பொலிஸில் வந்து சேருகின்றனர். இந்த நிலைமை தற்போது மாறியுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது நீதவான் தனது மேசைக்கு கீழாக மறைந்திருந்தார்.

இந்த நாட்டில் நீதி வழங்கும் நீதிபதிகளும் அவர்களது மேசைக்கு கீழாக மறைந்து தமது உயிரை பாதுகாக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு இருப்பதாக மட்டும் கூறிக்கொண்டு இருப்பதால் மாத்திரம் பலனில்லை.

பொதுமக்கள், தேசிய பாதுகாப்பு என்பன இரண்டு கிடையாது. இரண்டும் ஒன்றே.

30 வருட கால யுத்தமே தேசிய பாதுகாப்பு செயலிழக்க காரணம்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை பயன்படுத்தினர். அதன் பின்னர் பல உப குழுக்கள் காணப்பட்டன.

அதற்கிடையில் ஈரோஸ், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்  போன்ற பல அமைப்புக்களிடம் ஆயுதங்கள் காணப்பட்டன.

இந்த ஆயுதங்கள் இதுவரை ஒப்படைக்கப்பட்டனவா என்று நாம் பார்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டதா?

நான் கூறவில்லை இவர்கள் தான் பாவித்தார்கள் என்று. இவர்கள் ஒப்படைத்த ஆயுதங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு சரியானதொரு வேலைத்திட்டம் இருக்கின்றதா?

இது சரியாக ஒப்படைக்கப்பட்டதா? மக்கள் விடுதலை முன்னணியினரிடமும் ஆயுதங்கள் காணப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியினரை அடக்குவதற்காகவும் அரசாங்கமும் ஆயுதங்களை பயன்படுத்தியது.

எனவே  உங்களிடம் இருக்கும் ஆயுதங்களை ஒப்படையுங்கள். பாதாள உலக கோஸ்டியினர் மோதிக்கொள்வதில் எமக்கு பிரச்சினை கிடையாது.

அப்பாவி மக்கள் அதனால் மரணிக்கின்றனர். 2 பிள்ளைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். தந்தைமார்களின் பிரச்சினைகள் வேறானது சிறிய பிள்ளைகள் அப்பாவியானவர்கள். அவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, இலங்கை பாதாள உலக கோஷ்டியினரின் நாடாக மாறிவருகின்றது.

இவற்றை பற்றியே தான் கருத்துக்களை முன்வைத்து வருகின்றோம்.

எனவே மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் இருக்கின்றது.

எனவே தயவு செய்து 2035 ஆயுதங்கள் ஒப்படைக்கப்படவில்லை. அந்த ஆயுதங்கள் எங்கு இருக்கின்றது. என்று கூறுங்கள்.

அதேபோன்றுதான் தயவு செய்து ஒப்படையுங்கள். ஆயுதங்கள் வேறு குழுக்களிடம் இருக்கின்றதா எனவும் தேடிப்பாருங்கள். அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தான் ஆட்சியில் இருக்கின்றீர்கள் எனவும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

டெலோ அமைப்பு ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்கவில்லை என தயாசிறி கூயிருக்கன்றார். எங்களிடம் தற்போது ஆயுதங்கள் இல்லை. 

அது பயங்கரவாதத்திற்கு எந்தவிதத்திலும் துணைபோனதாக இருக்கவில்லை எனவும் இந்த பாதால உலக குழுவோடும் தொடர்பில்லை எனவும் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






































































பாதாள உலக கோஷ்டியினரின் நாடாக மாறிவரும் இலங்கை; சபையில் தயாசிறி சுட்டிக்காட்டு. இலங்கையானது தற்போது  பாதாள உலக கோஷ்டியினரின் நாடாக மாறிவருவதாக  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு தற்போது செயலிழந்துள்ளது.இது தொடர்பில் பாராளுமன்றில் கேள்வியெழுப்பிய போது பிமல் ரட்ணாயக்க எனக்கு தடையேற்படுத்தினார்.அதன்பின்னர், நளிந்த ஜயதிஸ்ஸவும் இது எமக்கு தேவையில்லாத விடயம் என்று அன்று எமக்கு  எதிராக குற்றம் சுமத்தினார்கள்.அதேவேளை, கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 09ற்கு கூட்டி வர வேண்டிய நபரை நீதிமன்றத்திலே காலை வேளையிலே பூசா பிரதேசத்திலிருந்து கொண்டு வரும்  போது அந்த 9 நீதிமன்றம் என்பது எந்தவொரு ஆயுதத்தையும் வெளியில் எடுக்ககக்கூடிய முற்றாக சனநெரிசல் மிகுந்த நீதிமன்றமாக காணப்படுகின்றது.எனவே, அந்த நீதிமன்றத்தின் நீதிபதி வராமல் இருக்க, அதாவது 5 என்பது நுகர்வோர் விவகார பாதுகாப்பு தொடர்பான வழக்குகளே அங்கு விசாரிக்கப்படும்.அங்கு போதுமான இடவசதிகள் காணப்படுகின்றன. எனவே துப்பாக்கி எவ்வாறு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது.ஏன் குறித்த நபர் ஐந்தாவது நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். இதற்கு காரணமாக இருந்தவர் யார் என வினவப்பட்டது.இதனடிப்படையிலேயே நான் கேட்கின்றேன் நீதித்துறையில் சில தொடர்புகள் இங்கு இருக்கின்றது. சிறைச்சாலை, பொலிஸார் ஆகியோர் ஒன்றிணைந்தே பணியாற்றுகின்றனர்.இப்போது பாதாள உலகத்தினர் பொலிஸில் வந்து சேருகின்றனர். இந்த நிலைமை தற்போது மாறியுள்ளது.குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது நீதவான் தனது மேசைக்கு கீழாக மறைந்திருந்தார்.இந்த நாட்டில் நீதி வழங்கும் நீதிபதிகளும் அவர்களது மேசைக்கு கீழாக மறைந்து தமது உயிரை பாதுகாக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.தேசிய பாதுகாப்பு இருப்பதாக மட்டும் கூறிக்கொண்டு இருப்பதால் மாத்திரம் பலனில்லை.பொதுமக்கள், தேசிய பாதுகாப்பு என்பன இரண்டு கிடையாது. இரண்டும் ஒன்றே.30 வருட கால யுத்தமே தேசிய பாதுகாப்பு செயலிழக்க காரணம்.விடுதலைப் புலிகள் ஆயுதங்களை பயன்படுத்தினர். அதன் பின்னர் பல உப குழுக்கள் காணப்பட்டன.அதற்கிடையில் ஈரோஸ், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்  போன்ற பல அமைப்புக்களிடம் ஆயுதங்கள் காணப்பட்டன.இந்த ஆயுதங்கள் இதுவரை ஒப்படைக்கப்பட்டனவா என்று நாம் பார்க்க வேண்டும்.விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டதாநான் கூறவில்லை இவர்கள் தான் பாவித்தார்கள் என்று. இவர்கள் ஒப்படைத்த ஆயுதங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு சரியானதொரு வேலைத்திட்டம் இருக்கின்றதாஇது சரியாக ஒப்படைக்கப்பட்டதா மக்கள் விடுதலை முன்னணியினரிடமும் ஆயுதங்கள் காணப்பட்டது.மக்கள் விடுதலை முன்னணியினரை அடக்குவதற்காகவும் அரசாங்கமும் ஆயுதங்களை பயன்படுத்தியது.எனவே  உங்களிடம் இருக்கும் ஆயுதங்களை ஒப்படையுங்கள். பாதாள உலக கோஸ்டியினர் மோதிக்கொள்வதில் எமக்கு பிரச்சினை கிடையாது.அப்பாவி மக்கள் அதனால் மரணிக்கின்றனர். 2 பிள்ளைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். தந்தைமார்களின் பிரச்சினைகள் வேறானது சிறிய பிள்ளைகள் அப்பாவியானவர்கள். அவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.எனவே, இலங்கை பாதாள உலக கோஷ்டியினரின் நாடாக மாறிவருகின்றது.இவற்றை பற்றியே தான் கருத்துக்களை முன்வைத்து வருகின்றோம்.எனவே மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் இருக்கின்றது.எனவே தயவு செய்து 2035 ஆயுதங்கள் ஒப்படைக்கப்படவில்லை. அந்த ஆயுதங்கள் எங்கு இருக்கின்றது. என்று கூறுங்கள்.அதேபோன்றுதான் தயவு செய்து ஒப்படையுங்கள். ஆயுதங்கள் வேறு குழுக்களிடம் இருக்கின்றதா எனவும் தேடிப்பாருங்கள். அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தான் ஆட்சியில் இருக்கின்றீர்கள் எனவும் தெரிவித்தார்.இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,டெலோ அமைப்பு ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்கவில்லை என தயாசிறி கூயிருக்கன்றார். எங்களிடம் தற்போது ஆயுதங்கள் இல்லை. அது பயங்கரவாதத்திற்கு எந்தவிதத்திலும் துணைபோனதாக இருக்கவில்லை எனவும் இந்த பாதால உலக குழுவோடும் தொடர்பில்லை எனவும் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement