• Jul 05 2025

பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி நகரும் இலங்கை!

shanuja / Jul 4th 2025, 10:44 am
image

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெற்ற திட்டத்தின் கீழ்,  இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் துணை நிர்வாக இயக்குநரும், செயல் தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அந்த அறிக்கையில் உள்ளதாவது, 

 

இலங்கையின் செயல்திறனை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை அண்மையில் மதிப்பாய்வு செய்ததை தொடர்ந்து இது வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையில் முக்கிய சீர்திருத்தங்கள் உறுதியான முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளன. 


 சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன, பொருளாதார வளர்ச்சி வலுவடைகிறது, பணவீக்கம் குறைவாகவே உள்ளது, இருப்புக்கள் குவிந்து வருகின்றன. 

 

இந்த நிலையில் இலங்கையின் அதிகாரிகள், தமது நிதியத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் துணை நிர்வாக இயக்குநரும், செயல் தலைவருமான கென்ஜி ஒகமுரா வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி நகரும் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெற்ற திட்டத்தின் கீழ்,  இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் துணை நிர்வாக இயக்குநரும், செயல் தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது,  இலங்கையின் செயல்திறனை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை அண்மையில் மதிப்பாய்வு செய்ததை தொடர்ந்து இது வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையில் முக்கிய சீர்திருத்தங்கள் உறுதியான முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளன.  சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன, பொருளாதார வளர்ச்சி வலுவடைகிறது, பணவீக்கம் குறைவாகவே உள்ளது, இருப்புக்கள் குவிந்து வருகின்றன.  இந்த நிலையில் இலங்கையின் அதிகாரிகள், தமது நிதியத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் துணை நிர்வாக இயக்குநரும், செயல் தலைவருமான கென்ஜி ஒகமுரா வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement