• May 21 2024

இலங்கை இன்னும் கீழே தான் உள்ளது! - அமைச்சர் வெளியிட்ட தகவல் SamugamMedia

Chithra / Mar 20th 2023, 9:45 am
image

Advertisement


கடந்த மாத இறுதியில் இலங்கையின் கையிருப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டதாகவும், கையிருப்பு தொகையை கருத்திற்கொண்டால் இலங்கை இன்னமும் மிகவும் குறைந்த நிலையிலேயே இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சிக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இந்த பெறுமதியை 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெஹியோவிட்டவில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் அவர் தெரிவித்தார்.

டொலரின் மதிப்பு தேவை மற்றும் விநியோகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அரசு இதை தேவையில்லாமல் கட்டுப்படுத்த முயன்றதில்லை. 

360 முதல் 380 ரூபாயாக இருந்த டொலர், தற்போது 320 ஆக குறைந்துள்ளது. IMF கடன் பிரீமியம் பெறுவது நமது கையிருப்பு அதிகரிக்க ஒரு காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

இலங்கை இன்னும் கீழே தான் உள்ளது - அமைச்சர் வெளியிட்ட தகவல் SamugamMedia கடந்த மாத இறுதியில் இலங்கையின் கையிருப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டதாகவும், கையிருப்பு தொகையை கருத்திற்கொண்டால் இலங்கை இன்னமும் மிகவும் குறைந்த நிலையிலேயே இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சிக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.இந்த பெறுமதியை 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெஹியோவிட்டவில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் அவர் தெரிவித்தார்.டொலரின் மதிப்பு தேவை மற்றும் விநியோகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அரசு இதை தேவையில்லாமல் கட்டுப்படுத்த முயன்றதில்லை. 360 முதல் 380 ரூபாயாக இருந்த டொலர், தற்போது 320 ஆக குறைந்துள்ளது. IMF கடன் பிரீமியம் பெறுவது நமது கையிருப்பு அதிகரிக்க ஒரு காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement