• May 03 2024

இலங்கையை உலுக்கிய கோர விபத்து – தொடர்ந்தும் சடலங்களை தேடும் பணியில் கடற்படையினர்! samugammedia

Chithra / Jul 10th 2023, 7:53 am
image

Advertisement

பொலன்னறுவை, மனம்பிடிய கொட்டாலேய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மனம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர்களில் 17 வயது சிறுவனும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் சடலங்கள் உள்ளதா என்பதை கண்டறிய கடற்படையினரின் உதவியை நாட வேண்டியுள்ளதாகவும், இப்பேருந்து பாலத்தின் மீது 75% தூரம் பயணித்ததாகவும் அதன் பின்னர் ஆற்றில் கவிழ்ந்ததாகவும் பாலத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் பேருந்து அதிவேகமாக இயங்கியதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

பேருந்து அதிவேகமாக வந்ததா அல்லது பாலத்தில் டயர் வெடித்ததா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து – தொடர்ந்தும் சடலங்களை தேடும் பணியில் கடற்படையினர் samugammedia பொலன்னறுவை, மனம்பிடிய கொட்டாலேய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மனம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 17 வயது சிறுவனும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் சடலங்கள் உள்ளதா என்பதை கண்டறிய கடற்படையினரின் உதவியை நாட வேண்டியுள்ளதாகவும், இப்பேருந்து பாலத்தின் மீது 75% தூரம் பயணித்ததாகவும் அதன் பின்னர் ஆற்றில் கவிழ்ந்ததாகவும் பாலத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் பேருந்து அதிவேகமாக இயங்கியதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.பேருந்து அதிவேகமாக வந்ததா அல்லது பாலத்தில் டயர் வெடித்ததா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement