• Sep 17 2024

இலங்கை இன்னும் மூன்று இலக்குகளை அடைய வேண்டும்! அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Jul 15th 2023, 3:31 pm
image

Advertisement

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு 03 இலக்குகளை அடைய வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தியுள்ளாளர்

கடன், கடன் சேவை மற்றும் நிதித் தேவை ஆகிய அம்சங்களின் அடிப்படையில் குறித்த இலக்குகளை அடைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்த மாதத்துக்கான பணவீக்கம் 7 சதவீதமாக குறையும் என நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலகளாவிய வறுமையை ஒழிக்கும் வகையில் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

அந்த அமைப்பின் வளர்ச்சித் திட்டம், கொவிட் பரவலால் உலக நாடுகளில் 165 மில்லியன் மக்கள் வறுமையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

வறுமையை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அந்த திட்டத்தின் வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் இந்தியாவில் கூடவுள்ள ஜு-20 குழுவின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், நெருக்கடியில் உள்ள நாடுகளின் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேவையான சீர்திருத்தங்களுடன் சர்வதேச கடன் மறுசீரமைப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்படும் என ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜீ 20 குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் மூன்றாவது கூட்டம் நேற்றும் இன்றும் இந்தியாவின் குஜராத்தில் நடைபெறுகிறது.


இலங்கை இன்னும் மூன்று இலக்குகளை அடைய வேண்டும் அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு 03 இலக்குகளை அடைய வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தியுள்ளாளர்கடன், கடன் சேவை மற்றும் நிதித் தேவை ஆகிய அம்சங்களின் அடிப்படையில் குறித்த இலக்குகளை அடைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.அதேநேரம், இந்த மாதத்துக்கான பணவீக்கம் 7 சதவீதமாக குறையும் என நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, உலகளாவிய வறுமையை ஒழிக்கும் வகையில் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.அந்த அமைப்பின் வளர்ச்சித் திட்டம், கொவிட் பரவலால் உலக நாடுகளில் 165 மில்லியன் மக்கள் வறுமையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.வறுமையை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அந்த திட்டத்தின் வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.அடுத்த வாரம் இந்தியாவில் கூடவுள்ள ஜு-20 குழுவின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், நெருக்கடியில் உள்ள நாடுகளின் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேவையான சீர்திருத்தங்களுடன் சர்வதேச கடன் மறுசீரமைப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்படும் என ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜீ 20 குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் மூன்றாவது கூட்டம் நேற்றும் இன்றும் இந்தியாவின் குஜராத்தில் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

Advertisement