• Nov 23 2024

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடும் ரஷ்யர்கள் மீது கடும் நடவடிக்கை! அமைச்சர் மனுஷ எச்சரிக்கை

Chithra / Mar 7th 2024, 4:07 pm
image


சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபடும் ரஷ்ய பிரஜைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், வர்த்தக நடவடிக்கைகளுக்காக வர்த்தக விசா வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அமைச்சர் இதனைத்  தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளராக தேசிய கொள்கைகளுடனான வேட்பாளராகவே அவர் களமிறங்குவார்.

எனவே கட்சி ரீதியாகவும் தனிநபராகவும் அமைப்புக்கள் சார்பாகவும் ஒத்துழைப்பு வழங்கமுடியும்.

ஏனென்றால் நாட்டின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து சிறந்த கொள்கை திட்டங்களுடனேயே ஜனாதிபதி 

வங்குரோத்து நிலையில் இருந்து ஒன்றரை வருடகாலத்திற்குள் நாட்டை மீட்டெடுத்தவர் ரணில் விக்ரமசிங்க. அவரால்தான்  நாட்டை கட்டியெழுப்பமுடியும் என்பதை மக்களும் அறிவர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடும் ரஷ்யர்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் மனுஷ எச்சரிக்கை சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபடும் ரஷ்ய பிரஜைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், வர்த்தக நடவடிக்கைகளுக்காக வர்த்தக விசா வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அமைச்சர் இதனைத்  தெரிவித்துள்ளார்.பொது வேட்பாளராக தேசிய கொள்கைகளுடனான வேட்பாளராகவே அவர் களமிறங்குவார்.எனவே கட்சி ரீதியாகவும் தனிநபராகவும் அமைப்புக்கள் சார்பாகவும் ஒத்துழைப்பு வழங்கமுடியும்.ஏனென்றால் நாட்டின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து சிறந்த கொள்கை திட்டங்களுடனேயே ஜனாதிபதி வங்குரோத்து நிலையில் இருந்து ஒன்றரை வருடகாலத்திற்குள் நாட்டை மீட்டெடுத்தவர் ரணில் விக்ரமசிங்க. அவரால்தான்  நாட்டை கட்டியெழுப்பமுடியும் என்பதை மக்களும் அறிவர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement