• Dec 27 2024

இலங்கையில் அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்கள் இறக்குமதி!

Tamil nila / Dec 22nd 2024, 8:43 am
image

இலங்கையில் அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் வேகமாகக் குறையும் என ஜப்பான், இலங்கை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க, குறைந்த இயந்திர திறன் கொண்ட வாகனங்களே நாட்டுக்கு மிகவும் பொருத்தமானது.

கொவிட் தொற்று நோயுடன், 2021 முதல் நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, அடுத்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்த நிலைமையுடன் நாட்டில் வாகனங்களின் விலைகள் வேகமாகக் குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்கள் இறக்குமதி இலங்கையில் அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது.இந்த நிலையில், நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் வேகமாகக் குறையும் என ஜப்பான், இலங்கை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க, குறைந்த இயந்திர திறன் கொண்ட வாகனங்களே நாட்டுக்கு மிகவும் பொருத்தமானது.கொவிட் தொற்று நோயுடன், 2021 முதல் நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.இதன்படி, அடுத்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.அந்த நிலைமையுடன் நாட்டில் வாகனங்களின் விலைகள் வேகமாகக் குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement