• Apr 26 2024

கிரிக்கெட் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்

Chithra / Jan 14th 2023, 8:50 am
image

Advertisement

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகளின் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இதுவரை 880 போட்டிகளில் விளையாடி 437 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது.

1990-2011 வரை, இலங்கை அணி ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஆட்சி செய்தது. எனினும் மஹேல ஜெயவர்த்தனே, மற்றும் குமார் சங்கக்கார போன்றவர்களின் ஓய்வுக்குப் பிறகு, அணி ஒருநாள் போட்டிகளில் தனது கௌரவத்தை இழந்தது.

இந்திய கிரிக்கெட் அணி 1022 ஆட்டங்களில் 436 தோல்விகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி 534 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 947 ஒருநாள் போட்டிகளில் அந்த அணி 419 தோல்விகளை சந்தித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, 852 போட்டிகளில் 402இல் தோல்வியடைந்து பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.

அடுத்ததடுத்த தோல்விக்கான இடங்களில், சிம்பாப்வே, நியூஷிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா,பங்களாதேஸ் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. 

கிரிக்கெட் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகளின் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை கிரிக்கெட் அணி இதுவரை 880 போட்டிகளில் விளையாடி 437 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது.1990-2011 வரை, இலங்கை அணி ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஆட்சி செய்தது. எனினும் மஹேல ஜெயவர்த்தனே, மற்றும் குமார் சங்கக்கார போன்றவர்களின் ஓய்வுக்குப் பிறகு, அணி ஒருநாள் போட்டிகளில் தனது கௌரவத்தை இழந்தது.இந்திய கிரிக்கெட் அணி 1022 ஆட்டங்களில் 436 தோல்விகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி 534 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 947 ஒருநாள் போட்டிகளில் அந்த அணி 419 தோல்விகளை சந்தித்துள்ளது.மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, 852 போட்டிகளில் 402இல் தோல்வியடைந்து பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.அடுத்ததடுத்த தோல்விக்கான இடங்களில், சிம்பாப்வே, நியூஷிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா,பங்களாதேஸ் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement