• Sep 17 2024

இலங்கை மோசமான படுகுழியில் விழும்! உலகத்துடன் வியாபாரம் செய்து நாட்டை நடத்த முடியாது! அமைச்சர் கருத்து SamugamMedia

Chithra / Mar 21st 2023, 10:57 am
image

Advertisement

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள முழுமையான நிதி வசதிகள் தொடர்பில் பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை அரசாங்கத்திற்கு இல்லை என 

அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற வாராந்த  ஊடக சந்திப்பு இன்று தகவல் திணைக்களத்தில் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றிருந்தது. 

இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அனைத்து விடயங்களும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் பிரகாரம் பணத்தின் மீதான முழு அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் விசேட அம்சம் என்னவெனில் 48 மாதங்களில் இலங்கையை யார் ஆட்சி செய்தாலும் அரசியல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் உடன்பட்ட வேலைத்திட்டத்தையே அமுல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். 

உலகத்துடன் வியாபாரம் செய்து இந்த நாட்டை நடத்த முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு செய்துள்ள ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என்றே நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இதற்கு முன்னர் 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றியதால், தனிப்பட்ட முறையில் இதுபோன்ற கருத்துக்கணிப்பு நடத்துவது முக்கியம் என தெரிவித்த பந்துல குணவர்தன அரசியல் நிகழ்ச்சி நிரல்களை விடுத்து, ஒருமித்த கருத்தை உருவாக்குவதே முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

இல்லாதுவிட்டால் இலங்கை மோசமான படுகுழியில் விழும் என்றும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மோசமான படுகுழியில் விழும் உலகத்துடன் வியாபாரம் செய்து நாட்டை நடத்த முடியாது அமைச்சர் கருத்து SamugamMedia சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள முழுமையான நிதி வசதிகள் தொடர்பில் பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற வாராந்த  ஊடக சந்திப்பு இன்று தகவல் திணைக்களத்தில் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அனைத்து விடயங்களும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.அரசியலமைப்பின் பிரகாரம் பணத்தின் மீதான முழு அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த வேலைத்திட்டத்தின் விசேட அம்சம் என்னவெனில் 48 மாதங்களில் இலங்கையை யார் ஆட்சி செய்தாலும் அரசியல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் உடன்பட்ட வேலைத்திட்டத்தையே அமுல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். உலகத்துடன் வியாபாரம் செய்து இந்த நாட்டை நடத்த முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு செய்துள்ள ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என்றே நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இலங்கை இதற்கு முன்னர் 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றியதால், தனிப்பட்ட முறையில் இதுபோன்ற கருத்துக்கணிப்பு நடத்துவது முக்கியம் என தெரிவித்த பந்துல குணவர்தன அரசியல் நிகழ்ச்சி நிரல்களை விடுத்து, ஒருமித்த கருத்தை உருவாக்குவதே முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.இல்லாதுவிட்டால் இலங்கை மோசமான படுகுழியில் விழும் என்றும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement