• May 02 2024

இலங்கையில் போலி முகப்புத்தகங்கள் ஊடாக நடத்தை கொலை செய்யப்படும் பெண்கள்!

Chithra / Jan 10th 2023, 12:57 pm
image

Advertisement

பெண்களை நடத்தைக்கொலை செய்வதன் காரணமாகவே அரசியலில் பெண்களின் வகிபாகம் குறைவாக காணப்படுவதாக பால்நிலை மற்றும் தேர்தல்கள் செய்பாட்டுக்குழுவின் அங்கத்தவர் நளினி இரட்ணராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தற்போது தொழில்நுட்பம் அதிகரித்துள்ளதுடன் முகப்புத்தகங்களில் தனிநபர் தொடர்பான அவதூறுகள் போலி முகப்புத்தக கணக்கினுடான முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பெண்களை நடத்தை கொலை செய்வது தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. சிறீமா இருந்த காலத்திலிருந்து இன்றுவரை நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் தொழில்நுட்பம் வளர்ந்த காரணத்தால் இன்று வலை தளங்களிலும், முகநூலிலும், வட்சப்பிலும்

பெண்களை பாரிய அவதூறுகள் பரப்பபட்டுக்கொண்டு இருக்கிறது.

அவர்களை நடத்தை கொலை செய்கின்றார்கள்.

ஒரு பெண் அரசியலுக்கு வந்தால் அவளுடைய அரசியல் நிலைப்பாட்டை கேள்வி கேட்பதில்லை, விமர்சிப்பதில்லை.

மாறாக அவளுடைய தனி நபராக அவளுடைய வாழ்க்கையை விமர்சிப்பதாகவே இருக்கின்றதுக்கு.

அதை விடுத்தது அவதூறு பேசுதல்.நடத்தை கெட்டவள்,குடிக்காரி என இந்த மாறியன அவதூறுகள் பேசப்பட்டு கொண்டிருக்கின்றன.


நிறைய வலை தளங்கள் இலங்கையில் பதியப்படாத மற்றும் பதியப்பட்ட வலை தளங்களில் பெயரில்லாமல் செய்திகளை பதிவிடுகின்றார்கள்.

அதே போன்று முகநூல்களிலும் பேக் ஐடிகளில் வருபவர்கள் நிறைய அவதூறை பரப்புகின்றனர்.

எங்கள் சமூகத்தில் ஒரு நிலை இருக்கிறது பெண்ணானவள் குடும்ப பெண்ணாக இருக்க வேண்டும், குடும்பத்திற்கேற்ற பெண்ணாக இருக்க வேண்டும்.

இந்த மாதிரியான அவதூறு வருகின்ற போது குடும்ப பெண் என்ற கட்டமைப்புக்குள் இருந்து விட முடியாது.ஆகவே, எதற்கு பயந்து பல பெண்கள் அரசியலுக்கு வருவதில்லை.

இதற்கு பயந்து அவளது குடும்பம் அவளை பின்வாங்க சொல்லி கேட்டுக்கொண்டிருக்கின்றது.

இலங்கையில் போலி முகப்புத்தகங்கள் ஊடாக நடத்தை கொலை செய்யப்படும் பெண்கள் பெண்களை நடத்தைக்கொலை செய்வதன் காரணமாகவே அரசியலில் பெண்களின் வகிபாகம் குறைவாக காணப்படுவதாக பால்நிலை மற்றும் தேர்தல்கள் செய்பாட்டுக்குழுவின் அங்கத்தவர் நளினி இரட்ணராஜா தெரிவித்துள்ளார்.நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.தற்போது தொழில்நுட்பம் அதிகரித்துள்ளதுடன் முகப்புத்தகங்களில் தனிநபர் தொடர்பான அவதூறுகள் போலி முகப்புத்தக கணக்கினுடான முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.பெண்களை நடத்தை கொலை செய்வது தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. சிறீமா இருந்த காலத்திலிருந்து இன்றுவரை நடந்து கொண்டிருக்கின்றது.ஆனால் தொழில்நுட்பம் வளர்ந்த காரணத்தால் இன்று வலை தளங்களிலும், முகநூலிலும், வட்சப்பிலும்பெண்களை பாரிய அவதூறுகள் பரப்பபட்டுக்கொண்டு இருக்கிறது.அவர்களை நடத்தை கொலை செய்கின்றார்கள்.ஒரு பெண் அரசியலுக்கு வந்தால் அவளுடைய அரசியல் நிலைப்பாட்டை கேள்வி கேட்பதில்லை, விமர்சிப்பதில்லை.மாறாக அவளுடைய தனி நபராக அவளுடைய வாழ்க்கையை விமர்சிப்பதாகவே இருக்கின்றதுக்கு.அதை விடுத்தது அவதூறு பேசுதல்.நடத்தை கெட்டவள்,குடிக்காரி என இந்த மாறியன அவதூறுகள் பேசப்பட்டு கொண்டிருக்கின்றன.நிறைய வலை தளங்கள் இலங்கையில் பதியப்படாத மற்றும் பதியப்பட்ட வலை தளங்களில் பெயரில்லாமல் செய்திகளை பதிவிடுகின்றார்கள்.அதே போன்று முகநூல்களிலும் பேக் ஐடிகளில் வருபவர்கள் நிறைய அவதூறை பரப்புகின்றனர்.எங்கள் சமூகத்தில் ஒரு நிலை இருக்கிறது பெண்ணானவள் குடும்ப பெண்ணாக இருக்க வேண்டும், குடும்பத்திற்கேற்ற பெண்ணாக இருக்க வேண்டும்.இந்த மாதிரியான அவதூறு வருகின்ற போது குடும்ப பெண் என்ற கட்டமைப்புக்குள் இருந்து விட முடியாது.ஆகவே, எதற்கு பயந்து பல பெண்கள் அரசியலுக்கு வருவதில்லை.இதற்கு பயந்து அவளது குடும்பம் அவளை பின்வாங்க சொல்லி கேட்டுக்கொண்டிருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement