• Sep 20 2024

சிங்கப்பூர் எயார்லைன்ஸில் இலங்கை வந்த பயணியொருவர் கைது!

Chithra / Aug 11th 2024, 9:10 am
image

Advertisement

 

சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானப்பயணியொருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு 365 மீன்கள் மற்றும் ஆமைகளை விற்பனைக்கு கொண்டு வந்த  விமானப்பயணியே சுங்க பல்லுயிர் பாதுகாப்பு பிரிவு மற்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, தலவத்துகொட பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய வர்த்தகரான இவர், தனது நண்பருக்கு இந்த மீன் மற்றும் ஆமைகளை கொண்டு வந்ததாக சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானமான SK-468 இல் நேற்று அதிகாலை 12.35 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்த விலங்குகளை தனது பயணப்பொதியில் மறைத்து வைத்து கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் ஆக்ஸிஜன் வாயுவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்போது சுங்க பல்லுயிர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


சிங்கப்பூர் எயார்லைன்ஸில் இலங்கை வந்த பயணியொருவர் கைது  சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானப்பயணியொருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கைக்கு 365 மீன்கள் மற்றும் ஆமைகளை விற்பனைக்கு கொண்டு வந்த  விமானப்பயணியே சுங்க பல்லுயிர் பாதுகாப்பு பிரிவு மற்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு, தலவத்துகொட பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய வர்த்தகரான இவர், தனது நண்பருக்கு இந்த மீன் மற்றும் ஆமைகளை கொண்டு வந்ததாக சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானமான SK-468 இல் நேற்று அதிகாலை 12.35 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இந்த விலங்குகளை தனது பயணப்பொதியில் மறைத்து வைத்து கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் ஆக்ஸிஜன் வாயுவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன்போது சுங்க பல்லுயிர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement