• Sep 19 2024

இலங்கை தமிழர் முகாமில் சாதனை படைத்த மாணவி..! தமிழக அமைச்சர் வழங்கியுள்ள அன்பளிப்பு! samugammedia

Chithra / May 28th 2023, 6:41 am
image

Advertisement

இந்தியா - ஆணையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மாணவி ரித்யுஷா பன்னிரண்டாம் வகுப்புப் பரீட்சையில் 600க்கு 591 புள்ளிகளை பெற்று  சாதனை படைத்துள்ளார்.

மாணவியின் திறமையினை பாராட்டி தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாணவிக்கு கல்லூரி இடஒதுக்கீடு வழங்கி பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் மாணவியின் வெற்றி குறித்து தமிழக தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலும் தெரிவிக்கையில்,

மாணவி ரித்யுஷாவைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி வாயிலாகத் தெரிந்துகொண்டேன். மாணவியை இல்லத்திற்கு அழைத்து வாழ்த்தும் போது "படிக்க வசதியில்லை; ஆன்லைன் மூலம் கல்வி கற்க உள்ளேன்", என அந்த மாணவி என்னிடம் தெரிவித்திருந்தார்.


நேரடியாக கல்லூரியில் கற்பதன் அவசியத்தை எடுத்துக்கூறியதோடு, மதுரை லேடி டோக்(Lady Doak) கல்லூரி முதல்வரிடம் அம்மாணவியின் மேற்படிப்பு செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தேன்.

மேலும் மாணவி படிக்க விரும்பும் துறையில் இணைய அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கமைய, தற்பொழுது லேடி டோக்(Lady Doak) கல்லூரி முதல்வர் அம்மாணவிக்குச் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் இடம் ஒதுக்கியுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.


இலங்கை தமிழர் முகாமில் சாதனை படைத்த மாணவி. தமிழக அமைச்சர் வழங்கியுள்ள அன்பளிப்பு samugammedia இந்தியா - ஆணையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மாணவி ரித்யுஷா பன்னிரண்டாம் வகுப்புப் பரீட்சையில் 600க்கு 591 புள்ளிகளை பெற்று  சாதனை படைத்துள்ளார்.மாணவியின் திறமையினை பாராட்டி தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாணவிக்கு கல்லூரி இடஒதுக்கீடு வழங்கி பாராட்டியுள்ளார்.இந்நிலையில் மாணவியின் வெற்றி குறித்து தமிழக தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேலும் தெரிவிக்கையில்,மாணவி ரித்யுஷாவைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி வாயிலாகத் தெரிந்துகொண்டேன். மாணவியை இல்லத்திற்கு அழைத்து வாழ்த்தும் போது "படிக்க வசதியில்லை; ஆன்லைன் மூலம் கல்வி கற்க உள்ளேன்", என அந்த மாணவி என்னிடம் தெரிவித்திருந்தார்.நேரடியாக கல்லூரியில் கற்பதன் அவசியத்தை எடுத்துக்கூறியதோடு, மதுரை லேடி டோக்(Lady Doak) கல்லூரி முதல்வரிடம் அம்மாணவியின் மேற்படிப்பு செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தேன்.மேலும் மாணவி படிக்க விரும்பும் துறையில் இணைய அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கமைய, தற்பொழுது லேடி டோக்(Lady Doak) கல்லூரி முதல்வர் அம்மாணவிக்குச் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் இடம் ஒதுக்கியுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement