• Sep 17 2024

யாழ்.போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர் கைது! பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! samugammedia

Chithra / May 28th 2023, 6:37 am
image

Advertisement

அச்சுவேலி, வல்லை - பருத்தித்துறை பிரதான வீதியில், கப் ரக வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் பதிவாகியுள்ளது.

தனது வீட்டு சுற்றுப்புறத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த தருனத்தில் வீதியில் பயணித்த கப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபர் மீது மோதியுள்ளது.

இந்நிலையில் 56 வயதான முதியவர் விபத்தின் போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை விபத்தின் போது அருகில் இருந்த மற்றொரு நபரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதுடன் வாகனத்தை செலுத்தியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவெலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


யாழ்.போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர் கைது பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் samugammedia அச்சுவேலி, வல்லை - பருத்தித்துறை பிரதான வீதியில், கப் ரக வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் பதிவாகியுள்ளது.தனது வீட்டு சுற்றுப்புறத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த தருனத்தில் வீதியில் பயணித்த கப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபர் மீது மோதியுள்ளது.இந்நிலையில் 56 வயதான முதியவர் விபத்தின் போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை விபத்தின் போது அருகில் இருந்த மற்றொரு நபரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதுடன் வாகனத்தை செலுத்தியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவெலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement