• May 19 2024

மதங்களை இழிவுபடுத்திய யுவதி - கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது..! samugammedia

Chithra / May 28th 2023, 6:51 am
image

Advertisement

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட நிலையிலேயே நடாஷா எதிரிசூரிய நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் இடம்பெற்ற ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியின் போது பௌத்தம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் பெண்ணொருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்று முறைப்பாடு கிடைத்துள்ளது.


குறித்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே, அவர் பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களை அவமதித்து பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவமதிப்பு மட்டுமின்றி கெட்ட வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் நடாஷா எதிரிசூரிய என அடையாளம் காணப்பட்டதோடு தொடர்புடைய காணொளியை இணையத்தில் வெளியிட்ட நபர் பின்னர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

இருப்பினும், சம்பத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     

மதங்களை இழிவுபடுத்திய யுவதி - கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது. samugammedia கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட நிலையிலேயே நடாஷா எதிரிசூரிய நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.அண்மையில் கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் இடம்பெற்ற ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியின் போது பௌத்தம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் பெண்ணொருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்று முறைப்பாடு கிடைத்துள்ளது.குறித்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே, அவர் பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களை அவமதித்து பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் அவமதிப்பு மட்டுமின்றி கெட்ட வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் நடாஷா எதிரிசூரிய என அடையாளம் காணப்பட்டதோடு தொடர்புடைய காணொளியை இணையத்தில் வெளியிட்ட நபர் பின்னர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.இருப்பினும், சம்பத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     

Advertisement

Advertisement

Advertisement