• May 21 2024

இந்தியா, சீனாவுடனான இலங்கையின் கடன் பேச்சுவார்த்தை வெற்றி! - ஜனாதிபதி

Chithra / Jan 17th 2023, 1:38 pm
image

Advertisement

திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டமூலங்கள் கொண்டுவரப்படும் போது அவற்றைக் கொண்டுவரக் கூடாது என்று கூறுபவர்களே திருடர்களைப் பாதுகாப்பதாகக் குற்றம் சுமத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட போது, ​​இந்த தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

ஒரே பாடத்தில் இரண்டு வரைவுகள் உள்ளன. முடிந்தால் இந்த வாரத்தில் தீர்த்து நிறைவேற்றுவோம். பிரச்சினை இல்லை. தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா அன்றைய தினம் தாக்கல் செய்யப்படும். அதனை முன்வைக்கும் வகையில் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தேர்தலை பாதிக்காது.

நான் திருடர்களைப் பாதுகாப்பதாகக் கூச்சலிடுகின்றனர். திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டமூலங்கள் கொண்டு வரப்படும் போது அதனைச் செய்ய வேண்டாம் என்று கூறுகின்றனர்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போதுவரை முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களை நோக்கும்போது, எமது பொருளாதாரத்தை சரியான பாதையில் தடமேற்றுவதற்காக நாம் முன்னெடுத்த செயற்பாடுகளை அவதானிக்க முடியும்.

மேலும், இந்தியா மற்றும் சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஒப்புதலை பெற வேண்டிய பணிகள் மாத்திரமே மீதமுள்ளன.

அந்த இரு நாடுகளுடனும் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதென கூறமுடியும்.

விரைவில் அது தொடர்பான பதில்கள் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்தியா, சீனாவுடனான இலங்கையின் கடன் பேச்சுவார்த்தை வெற்றி - ஜனாதிபதி திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டமூலங்கள் கொண்டுவரப்படும் போது அவற்றைக் கொண்டுவரக் கூடாது என்று கூறுபவர்களே திருடர்களைப் பாதுகாப்பதாகக் குற்றம் சுமத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட போது, ​​இந்த தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்;ஒரே பாடத்தில் இரண்டு வரைவுகள் உள்ளன. முடிந்தால் இந்த வாரத்தில் தீர்த்து நிறைவேற்றுவோம். பிரச்சினை இல்லை. தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா அன்றைய தினம் தாக்கல் செய்யப்படும். அதனை முன்வைக்கும் வகையில் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தேர்தலை பாதிக்காது.நான் திருடர்களைப் பாதுகாப்பதாகக் கூச்சலிடுகின்றனர். திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டமூலங்கள் கொண்டு வரப்படும் போது அதனைச் செய்ய வேண்டாம் என்று கூறுகின்றனர்.கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போதுவரை முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.கடந்த சில மாதங்களை நோக்கும்போது, எமது பொருளாதாரத்தை சரியான பாதையில் தடமேற்றுவதற்காக நாம் முன்னெடுத்த செயற்பாடுகளை அவதானிக்க முடியும்.மேலும், இந்தியா மற்றும் சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஒப்புதலை பெற வேண்டிய பணிகள் மாத்திரமே மீதமுள்ளன.அந்த இரு நாடுகளுடனும் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதென கூறமுடியும்.விரைவில் அது தொடர்பான பதில்கள் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement