• Sep 17 2024

“இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரே வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தீர்வு காண முடியாது”- ஜனாதிபதி ரணில்! samugammedia

Tamil nila / Nov 15th 2023, 8:49 pm
image

Advertisement

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரே வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காண முடியாது எனவும், நெருக்கடிக்கு ஏற்ப தீர்வு காணும் வழிமுறைகளை மாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்தி அதன் பின்னர் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பல்கலைக்கழக வர்த்தக நிர்வாக முதுகலைப் பட்டதாரி பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ‘2024 வரவு செலவுத் திட்டப் பேச்சு’ நிகழ்வில் இன்று (15) ஷங்ரிலா ஹோட்டலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாறிவரும் சூழலை மாற்றுவதன் மூலம் நெருக்கடிக்கு வெற்றிகரமான தீர்வுகளை காணமுடியும் எனவும் அதே முறை இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புதிய சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையாக வேலையின்மை நலன்களுக்காக ஒதுக்கப்படும் தொகை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரே வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தீர்வு காண முடியாது”- ஜனாதிபதி ரணில் samugammedia இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரே வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காண முடியாது எனவும், நெருக்கடிக்கு ஏற்ப தீர்வு காணும் வழிமுறைகளை மாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்தி அதன் பின்னர் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.கொழும்பு பல்கலைக்கழக வர்த்தக நிர்வாக முதுகலைப் பட்டதாரி பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ‘2024 வரவு செலவுத் திட்டப் பேச்சு’ நிகழ்வில் இன்று (15) ஷங்ரிலா ஹோட்டலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.மாறிவரும் சூழலை மாற்றுவதன் மூலம் நெருக்கடிக்கு வெற்றிகரமான தீர்வுகளை காணமுடியும் எனவும் அதே முறை இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.புதிய சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையாக வேலையின்மை நலன்களுக்காக ஒதுக்கப்படும் தொகை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement