இலங்கைக்கு மிக்ஜம் சூறாவளியினால் ஏற்படக் கூடிய பாதிப்பு குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த சூறாவளி யாழ்ப்பாணத்தில் இருந்து 650 கிலோமீற்றர் வடக்காக ஆந்திரா கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரத்தை அண்மித்த பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நாளை பிற்பகல் ஒரு மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும்
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக களுகங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகிய ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆறுகளை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மிக்ஜாம் சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு குறித்து வெளியான அறிவிப்பு. samugammedia இலங்கைக்கு மிக்ஜம் சூறாவளியினால் ஏற்படக் கூடிய பாதிப்பு குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.குறித்த சூறாவளி யாழ்ப்பாணத்தில் இருந்து 650 கிலோமீற்றர் வடக்காக ஆந்திரா கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி, சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரத்தை அண்மித்த பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதேவேளை, நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நாளை பிற்பகல் ஒரு மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும்மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.குறிப்பாக களுகங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகிய ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.ஆறுகளை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.