• Nov 23 2024

சாதனை படைத்த இலங்கை வீரர் ஜெப்ரி வாண்டர்சே!

Tamil nila / Aug 5th 2024, 10:49 pm
image

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

இப்போட்டியில் இலங்கை அணி வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே 10 ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஒரு சுழற்பந்து வீச்சாளராக, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு வெளிப்படுத்திய வீரர்கள் வரிசையில் ஜெஃப்ரி வாண்டர்சே 3வது இடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக கடந்த 1989ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது அதனை ஜெஃப்ரி வண்டர்சே முறியடித்துள்ளார்.

இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 30 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், இலங்கையைச் சேர்ந்த அஞ்சதா மெண்டிஸ் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

சாதனை படைத்த இலங்கை வீரர் ஜெப்ரி வாண்டர்சே இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.இப்போட்டியில் இலங்கை அணி வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே 10 ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் மூலம் ஒரு சுழற்பந்து வீச்சாளராக, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு வெளிப்படுத்திய வீரர்கள் வரிசையில் ஜெஃப்ரி வாண்டர்சே 3வது இடத்தை பிடித்துள்ளார்.முன்னதாக கடந்த 1989ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது அதனை ஜெஃப்ரி வண்டர்சே முறியடித்துள்ளார்.இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 30 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், இலங்கையைச் சேர்ந்த அஞ்சதா மெண்டிஸ் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement