• May 17 2024

இலங்கையின் மானம் 26ஆம் திகதி கப்பல் ஏறும்- திகாம்பரம் கருத்து!

Sharmi / Jan 9th 2023, 10:32 am
image

Advertisement

மலையகத்தில் கூலி தொழிலாளி என்ற வர்க்கத்தினரை இல்லாமல் செய்து அனைவரையும் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றவேண்டுமென அனைத்து நாடுகளின் தலைவர்களையும் வலியுறுத்தவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த மாதம் 26ஆம் திகதி மலைய மக்களின் அவலநிலையிலை சர்வதேசத்திற்கு எடுத்து காட்டுவதற்கு அனைவரையும் ஒன்றுபடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மலையகத்தில் கூலி தொழிலாளி என்ற வர்க்கத்தினரை இல்லாமல் செய்து அனைவரையும் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றவேண்டுமென அனைத்து நாடுகளின் தலைவர்களையும் வலியுறுத்தவுள்ளதாகவும் அடுத்த மாதம் 26ஆம் திகதி மலைய மக்களின் அவலநிலையிலை சர்வதேசத்திற்கு எடுத்து காட்டுவதற்கு அனைவரையும் ஒன்றுபடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சில பேர் ஒன்றுமே செய்யாது மேடைகளில் வீரம் பேசுவார்கள்.எனக்கு வீரம் பேச தெரியாது. மக்களுக்காக வேலை செய்ய தெரியும். அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். கட்டாயமாக பெப்ரவரி 26 ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் நினைவு கூறளை மேற்கொள்ளவுள்ளோம். எமது மக்களின் அவல நிலையை இந்திய நாட்டு தலைவர்களுக்கும், பிரித்தானிய நாட்டு தலைவர்களுக்கும், இலங்கையின் ஜனாதிபதி மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களுக்கும் எடுத்து சொல்லப்போகின்றோம். எமக்கு கூலி தொழிலார்கள் இல்லாமல் தோட்டங்களை பிரித்து கொடுத்து சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றினாலே எமது மக்களினுடைய பிரச்சினைகளை பார்த்துக்கொள்வோம்.
தொடர்ந்தும் இவ்வாறு செய்ய முடியாது. அதன் காரணமாகவே நான் நாடாளுமன்றதிலும் வெளியிலும் இது தொடர்பாக தொடர்ந்தும் பேசிக்கொண்டு இருக்கின்றேன்.

இன்று ஒரு கிலோ தேயிலை வெளியில் நூறு ரூபாயிலிருந்து நூற்று பத்து ரூபாய் வரை விற்பனை செய்கின்றார்கள்.எங்களிடம் ஐம்பது ரூபாய்க்கு கொள்வனவு செய்கின்றார்கள். இதே எமக்கு தோட்டங்களை பங்கீடு செய்து வழங்கி ஒரு கிலோ தேயிலையை 110 ரூபாய்க்கு, 20கிலோ தேயிலையை கொள்வனவு  செய்தால் 2,000 ரூபாய் கிடைக்கும். 30கிலோ தேயிலையை கொள்வனவு  செய்தால் 3,000 ரூபாய் கிடைக்கும். 

ஆகவே மக்களுடைய பிரைச்சினைகளை நாங்களே பேசிக்கொள்வோம். அதற்கு பின்னர் யூனியன் பற்றிய கதை தேவைப்படாது. நமக்கு தேவை மக்கள் இணையாய் வாழ வேண்டும், சிறு தோட்ட  உரிமையாளர்களாக முதலாளிகளாக வாழ வேண்டும். அனைத்தும் விரைவில் நடக்கும். வீடு கட்டுவோம் என்று யாரும் நினைத்து பார்த்தீர்களா? அதிகார சபைகளை கொண்டு வருவோம் என்று நினைத்து பார்த்தீர்களா?  அனைத்தையும் செய்து காட்டினோம்.அதே போன்று எதிர்காலத்தில் கட்டாயமாக எங்களுடைய தோட்ட தொழிலாளிகளை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் மானம் 26ஆம் திகதி கப்பல் ஏறும்- திகாம்பரம் கருத்து மலையகத்தில் கூலி தொழிலாளி என்ற வர்க்கத்தினரை இல்லாமல் செய்து அனைவரையும் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றவேண்டுமென அனைத்து நாடுகளின் தலைவர்களையும் வலியுறுத்தவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அடுத்த மாதம் 26ஆம் திகதி மலைய மக்களின் அவலநிலையிலை சர்வதேசத்திற்கு எடுத்து காட்டுவதற்கு அனைவரையும் ஒன்றுபடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.மலையகத்தில் கூலி தொழிலாளி என்ற வர்க்கத்தினரை இல்லாமல் செய்து அனைவரையும் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றவேண்டுமென அனைத்து நாடுகளின் தலைவர்களையும் வலியுறுத்தவுள்ளதாகவும் அடுத்த மாதம் 26ஆம் திகதி மலைய மக்களின் அவலநிலையிலை சர்வதேசத்திற்கு எடுத்து காட்டுவதற்கு அனைவரையும் ஒன்றுபடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், சில பேர் ஒன்றுமே செய்யாது மேடைகளில் வீரம் பேசுவார்கள்.எனக்கு வீரம் பேச தெரியாது. மக்களுக்காக வேலை செய்ய தெரியும். அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். கட்டாயமாக பெப்ரவரி 26 ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் நினைவு கூறளை மேற்கொள்ளவுள்ளோம். எமது மக்களின் அவல நிலையை இந்திய நாட்டு தலைவர்களுக்கும், பிரித்தானிய நாட்டு தலைவர்களுக்கும், இலங்கையின் ஜனாதிபதி மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களுக்கும் எடுத்து சொல்லப்போகின்றோம். எமக்கு கூலி தொழிலார்கள் இல்லாமல் தோட்டங்களை பிரித்து கொடுத்து சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றினாலே எமது மக்களினுடைய பிரச்சினைகளை பார்த்துக்கொள்வோம்.தொடர்ந்தும் இவ்வாறு செய்ய முடியாது. அதன் காரணமாகவே நான் நாடாளுமன்றதிலும் வெளியிலும் இது தொடர்பாக தொடர்ந்தும் பேசிக்கொண்டு இருக்கின்றேன்.இன்று ஒரு கிலோ தேயிலை வெளியில் நூறு ரூபாயிலிருந்து நூற்று பத்து ரூபாய் வரை விற்பனை செய்கின்றார்கள்.எங்களிடம் ஐம்பது ரூபாய்க்கு கொள்வனவு செய்கின்றார்கள். இதே எமக்கு தோட்டங்களை பங்கீடு செய்து வழங்கி ஒரு கிலோ தேயிலையை 110 ரூபாய்க்கு, 20கிலோ தேயிலையை கொள்வனவு  செய்தால் 2,000 ரூபாய் கிடைக்கும். 30கிலோ தேயிலையை கொள்வனவு  செய்தால் 3,000 ரூபாய் கிடைக்கும். ஆகவே மக்களுடைய பிரைச்சினைகளை நாங்களே பேசிக்கொள்வோம். அதற்கு பின்னர் யூனியன் பற்றிய கதை தேவைப்படாது. நமக்கு தேவை மக்கள் இணையாய் வாழ வேண்டும், சிறு தோட்ட  உரிமையாளர்களாக முதலாளிகளாக வாழ வேண்டும். அனைத்தும் விரைவில் நடக்கும். வீடு கட்டுவோம் என்று யாரும் நினைத்து பார்த்தீர்களா அதிகார சபைகளை கொண்டு வருவோம் என்று நினைத்து பார்த்தீர்களா  அனைத்தையும் செய்து காட்டினோம்.அதே போன்று எதிர்காலத்தில் கட்டாயமாக எங்களுடைய தோட்ட தொழிலாளிகளை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement