• May 07 2024

மின்னல் நிகழ்ச்சி ரங்காவிடம் ஒரு சந்தர்ப்பம் கேட்டோம் - கவலை வெளியிட்ட கடற்தொழிலாளி.!

Sharmi / Jan 9th 2023, 10:47 am
image

Advertisement

மீனவர்களின் வறுமைக்கு முதலாவது காரணம் அரசியல்வாதிகள் என வடமாகாண இணையத்தின் தலைவர் அச்சுதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மின்னல் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரங்காவிடம் கூட மீனவர்களின் பிரச்சனையை கதைப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் தருமாறு கூறியிருந்ததாகவும் ஆனால் அதுவும் கைநழுவி போனதாக அவர் கவலை வெளியிட்டிருந்தார்.

எனவே, மீனவர்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினை காண்பதற்கு ஒரு சந்தர்பத்தை தருமாறு வடமாகாண இணையத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

எங்களுடைய வறுமைக்கு காரணம் முதலாவது அரசியல்வாதிகள். 225 பாராளுமன்ற உறுப்பினரையும் நான் அன்பாக கேட்கின்றேன். நீங்கள் தான் எங்களுடைய வறுமைக்கு காரணம்.
நாங்கள் பசியின் நிமித்தம் கண்ணீர் விட்டு கேட்கின்றோம் எங்களுடைய பிரைச்சினைகளை கதையுங்கள். எங்களுக்கான தீர்வை தாருங்கள், எங்களுடைய உரிமையை தந்து எங்களை சரியாக வழிநடத்துங்கள் என்று தான் கேட்கின்றேன் உங்களுடன் நாங்கள் பிரச்சினைப்பட வரவில்லை.

நீங்கள் ஒரு கடற்றொழில் அமைச்சராகவோ, வர்த்தக அமைச்சராகவோ  அல்லது விவசாய அமைச்சராகவோ இருந்தாலும் சரி நேராக என்னையும் அழையுங்கள்.நான் ஊடகவியலாளர்களுக்கு பல கோடி நன்றி கூறுவேன். நான் கிளிநொச்சி மாவட்ட சம்மேளன தலைவராக இருக்கும் சந்தர்ப்பத்தில்,ரங்கா மின்னல் நிகழ்ச்சி செய்யும் போது அவரிடம் எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.  

அதற்கு அவர் வழங்குவதாக கூறியிருந்தார் பின்னர் மாறி சென்றுவிட்டார். அமைச்சர்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குங்கள் என்று ஊடகவியலாளரிடம் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். எங்களுடைய வறுமை, பசி, கண்ணீர் அனைத்திற்கும் இவர்கள் தான் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.


மின்னல் நிகழ்ச்சி ரங்காவிடம் ஒரு சந்தர்ப்பம் கேட்டோம் - கவலை வெளியிட்ட கடற்தொழிலாளி. மீனவர்களின் வறுமைக்கு முதலாவது காரணம் அரசியல்வாதிகள் என வடமாகாண இணையத்தின் தலைவர் அச்சுதன் குற்றம் சுமத்தியுள்ளார்.மின்னல் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரங்காவிடம் கூட மீனவர்களின் பிரச்சனையை கதைப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் தருமாறு கூறியிருந்ததாகவும் ஆனால் அதுவும் கைநழுவி போனதாக அவர் கவலை வெளியிட்டிருந்தார்.எனவே, மீனவர்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினை காண்பதற்கு ஒரு சந்தர்பத்தை தருமாறு வடமாகாண இணையத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்தது.இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.எங்களுடைய வறுமைக்கு காரணம் முதலாவது அரசியல்வாதிகள். 225 பாராளுமன்ற உறுப்பினரையும் நான் அன்பாக கேட்கின்றேன். நீங்கள் தான் எங்களுடைய வறுமைக்கு காரணம்.நாங்கள் பசியின் நிமித்தம் கண்ணீர் விட்டு கேட்கின்றோம் எங்களுடைய பிரைச்சினைகளை கதையுங்கள். எங்களுக்கான தீர்வை தாருங்கள், எங்களுடைய உரிமையை தந்து எங்களை சரியாக வழிநடத்துங்கள் என்று தான் கேட்கின்றேன் உங்களுடன் நாங்கள் பிரச்சினைப்பட வரவில்லை.நீங்கள் ஒரு கடற்றொழில் அமைச்சராகவோ, வர்த்தக அமைச்சராகவோ  அல்லது விவசாய அமைச்சராகவோ இருந்தாலும் சரி நேராக என்னையும் அழையுங்கள்.நான் ஊடகவியலாளர்களுக்கு பல கோடி நன்றி கூறுவேன். நான் கிளிநொச்சி மாவட்ட சம்மேளன தலைவராக இருக்கும் சந்தர்ப்பத்தில்,ரங்கா மின்னல் நிகழ்ச்சி செய்யும் போது அவரிடம் எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.  அதற்கு அவர் வழங்குவதாக கூறியிருந்தார் பின்னர் மாறி சென்றுவிட்டார். அமைச்சர்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குங்கள் என்று ஊடகவியலாளரிடம் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். எங்களுடைய வறுமை, பசி, கண்ணீர் அனைத்திற்கும் இவர்கள் தான் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement