• May 03 2024

இலங்கையில் நடுக்காட்டில் நடந்த விசித்திர திருமணம் -மணமக்களுக்கு குவியும் வாழ்த்து! samugammedia

Tamil nila / May 23rd 2023, 7:28 am
image

Advertisement

பதவிய - முல்முதே பகுதியில் விவசாயி ஒருவர் தனது மகனின் திருமண நிகழ்வை நேற்றுமுன் தினம் (21.05.2023) நடுக்காட்டில் கோலாகலமாக நடத்தியுள்ளார்.


பதவிய - முல்முதே பகுதியினை சேர்ந்த நடுன் சதுரங்க மற்றும் தசாஞ்சலி ஆகியோருக்கு இவ்வாறு திருமணம் செய்யப்பட்டுள்ளது.


பதவிய - புல்முடே வீதி, உறுவ பிரதேசத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில், கொஹொம்பபிட்டிய ஏரியின் அடிவாரத்தில், தெப்பம் அமைக்கப்பட்டு, மணமகன், மணமகள் அமரும் நாற்காலி என்பன காட்டில் கிடைக்கப்பெற்ற பொருட்களைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த திருமண நிகழ்வில் எவ்வித இசை கருவிகளும் பயன்படுத்தாது மெல்லிய இயற்கையின் சத்தத்துடன், பாரம்பரிய உணவு வகைகளை பின்பற்றி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.


இது குறித்து மணமகனின் தந்தை சமந்தா பிரேமலால் கூறுகையில், இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளை உணர்ந்து உலகில் வாழும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு காடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


மேலும் இந்த திருமண நிகழ்வில் இருதரப்பையும் சேர்ந்த சுமார் 300 உறவினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.





இலங்கையில் நடுக்காட்டில் நடந்த விசித்திர திருமணம் -மணமக்களுக்கு குவியும் வாழ்த்து samugammedia பதவிய - முல்முதே பகுதியில் விவசாயி ஒருவர் தனது மகனின் திருமண நிகழ்வை நேற்றுமுன் தினம் (21.05.2023) நடுக்காட்டில் கோலாகலமாக நடத்தியுள்ளார்.பதவிய - முல்முதே பகுதியினை சேர்ந்த நடுன் சதுரங்க மற்றும் தசாஞ்சலி ஆகியோருக்கு இவ்வாறு திருமணம் செய்யப்பட்டுள்ளது.பதவிய - புல்முடே வீதி, உறுவ பிரதேசத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில், கொஹொம்பபிட்டிய ஏரியின் அடிவாரத்தில், தெப்பம் அமைக்கப்பட்டு, மணமகன், மணமகள் அமரும் நாற்காலி என்பன காட்டில் கிடைக்கப்பெற்ற பொருட்களைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த திருமண நிகழ்வில் எவ்வித இசை கருவிகளும் பயன்படுத்தாது மெல்லிய இயற்கையின் சத்தத்துடன், பாரம்பரிய உணவு வகைகளை பின்பற்றி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.இது குறித்து மணமகனின் தந்தை சமந்தா பிரேமலால் கூறுகையில், இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளை உணர்ந்து உலகில் வாழும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வு காடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும் இந்த திருமண நிகழ்வில் இருதரப்பையும் சேர்ந்த சுமார் 300 உறவினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement