• Jan 11 2025

இலங்கை வரும் ஆய்வுக் கப்பல்களுக்கு நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறை!

Chithra / Jan 5th 2025, 12:54 pm
image

  

இலங்கை வருவதற்கு அனுமதி கோரும் உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையின் கீழ் அனுமதியளிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 

இதற்கு அமைவாக விசேட விதிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் வரும் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த தடையை முந்தைய அரசாங்கம் விதித்திருந்தது. 

எவ்வாறாயினும் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதால் ஏற்பட கூடிய இராஜதந்திர நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பொதுவானதொரு மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.  

இதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேராத் தலைமையிலான சிறப்பு குழுவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

எனவே புதிய விதிமுறை அறிமுகம் படுத்தும் வரை எந்தவொரு உலக நாடுகளில் ஆய்வுக்கப்பல்களும் இலங்கை விஜயத்திற்கு அனுமதி கோராது என்று நம்புவதாக அரசாங்கத்தின் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

இலங்கை வரும் ஆய்வுக் கப்பல்களுக்கு நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறை   இலங்கை வருவதற்கு அனுமதி கோரும் உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையின் கீழ் அனுமதியளிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைவாக விசேட விதிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.இலங்கை கடற்பரப்புக்குள் வரும் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.இந்த தடையை முந்தைய அரசாங்கம் விதித்திருந்தது. எவ்வாறாயினும் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதால் ஏற்பட கூடிய இராஜதந்திர நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பொதுவானதொரு மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.  இதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேராத் தலைமையிலான சிறப்பு குழுவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.எனவே புதிய விதிமுறை அறிமுகம் படுத்தும் வரை எந்தவொரு உலக நாடுகளில் ஆய்வுக்கப்பல்களும் இலங்கை விஜயத்திற்கு அனுமதி கோராது என்று நம்புவதாக அரசாங்கத்தின் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement