• Nov 28 2024

பாக்கு நீரிணையை கடந்து சாதனை புரிந்த மாணவனுக்கு முத்திரை வெளியீடு...!

Anaath / May 24th 2024, 7:31 pm
image

பாக்கு நீரிணையை கடந்து சாதனை புரிந்த 13 வயதுச் சிறுவன் ஹரிஹரன் தன்வந்திற்கு  இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரை பணியகத்தினால் முத்திரை ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31)  வெளியிடப்படவுள்ளது. 

இந்த நினைவு முத்திரையை வெளியிடும் நிகழ்வானது கோணேஸ்வரா இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் திறந்த வெளி அரங்கில் அந்தக்கல்லூரியின் அதிபர் ந.பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில்  பிரதம விருந்தினர்களாக கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானும்  கௌரவ விருந்தினர்களாக அஞ்சல் மா அதிபர் ருவான் சாந்த குமார, ஆளுநர் செயலாளர் நாயகம்   பி.எல் மத்தநாயக்க, பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித மு. ரணசிங்க ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன், முன்னாள் யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கத்தலைவர் சண்முகம் குகதாசன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பாக்கு நீரிணையை கடந்து சாதனை புரிந்த மாணவனுக்கு முத்திரை வெளியீடு. பாக்கு நீரிணையை கடந்து சாதனை புரிந்த 13 வயதுச் சிறுவன் ஹரிஹரன் தன்வந்திற்கு  இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரை பணியகத்தினால் முத்திரை ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31)  வெளியிடப்படவுள்ளது. இந்த நினைவு முத்திரையை வெளியிடும் நிகழ்வானது கோணேஸ்வரா இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் திறந்த வெளி அரங்கில் அந்தக்கல்லூரியின் அதிபர் ந.பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.இந்நிகழ்வில்  பிரதம விருந்தினர்களாக கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானும்  கௌரவ விருந்தினர்களாக அஞ்சல் மா அதிபர் ருவான் சாந்த குமார, ஆளுநர் செயலாளர் நாயகம்   பி.எல் மத்தநாயக்க, பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித மு. ரணசிங்க ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன், முன்னாள் யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கத்தலைவர் சண்முகம் குகதாசன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement