• May 10 2024

காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி நடவடிக்கை - பெரும் வரம் என்கிறார் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் samugammedia

Chithra / Nov 15th 2023, 10:52 am
image

Advertisement


வரவு செலவு திட்டத்தின் மூலம் வடமாகாணத்துக்கு பாரியளவில் ஒதுக்கீடுகளை செய்துள்ளதுடன் வன்னி மாவட்ட மக்கள் எதிர்கொண்டுவரும் காணிப்பிரச்சினைக்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (14) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 கடற்றொழிலை விருத்தி செய்வதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கி இருப்பதன் மூலம் குறிப்பாக வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

அத்துடன், வன்னி மாவட்ட மக்கள் நீண்டகாலமாக காணிப்பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். 

அதேபோன்று விவசாயிகளுக்கு காணி வழங்குவதற்கு  2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

எமது பகுதியை பொறுத்தவரையில் காணி பிரச்சினை என்பது பாரிய பிரச்சினையாகும்.

என்றாலும் ஜனாதிபதி இதனை உணர்ந்து அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்திருப்பது எமக்கு கிடைத்திருக்கும் பெரும் வரமாகவே நான் காண்கிறேன்.

மேலும், கிராமிய பாதைகளை புதுப்பிப்பதற்காக வரவு செலவு திட்டம் மூலம் 10 பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கும் எமது பிரதேச கிராமிய பாதைகளை புதுப்பிக்க இந்த நிதியில் இருந்து ஒரு பில்லியனாவது வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி நடவடிக்கை - பெரும் வரம் என்கிறார் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் samugammedia வரவு செலவு திட்டத்தின் மூலம் வடமாகாணத்துக்கு பாரியளவில் ஒதுக்கீடுகளை செய்துள்ளதுடன் வன்னி மாவட்ட மக்கள் எதிர்கொண்டுவரும் காணிப்பிரச்சினைக்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று (14) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். கடற்றொழிலை விருத்தி செய்வதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கி இருப்பதன் மூலம் குறிப்பாக வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.அத்துடன், வன்னி மாவட்ட மக்கள் நீண்டகாலமாக காணிப்பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதேபோன்று விவசாயிகளுக்கு காணி வழங்குவதற்கு  2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. எமது பகுதியை பொறுத்தவரையில் காணி பிரச்சினை என்பது பாரிய பிரச்சினையாகும்.என்றாலும் ஜனாதிபதி இதனை உணர்ந்து அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்திருப்பது எமக்கு கிடைத்திருக்கும் பெரும் வரமாகவே நான் காண்கிறேன்.மேலும், கிராமிய பாதைகளை புதுப்பிப்பதற்காக வரவு செலவு திட்டம் மூலம் 10 பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கும் எமது பிரதேச கிராமிய பாதைகளை புதுப்பிக்க இந்த நிதியில் இருந்து ஒரு பில்லியனாவது வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement