• Sep 17 2024

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அதிரடி அறிவிப்பு! samugammedia

Chithra / Aug 16th 2023, 12:05 pm
image

Advertisement

 சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை முன்பைப் போலவே வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் தமது டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

647,683 பேருக்கு முன்பைப் போன்று கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் பணம் செலுத்தப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, காத்திருப்போர் பட்டியல் உட்பட 517,962 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 88,602 பேருக்கு விசேட தேவையுடையோருக்கான உதவித் தொகையும், 41,119 பேருக்கு சிறுநீரக நோயாளர் உதவித்தொகையும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதியோர் கொடுப்பனவு அஞ்சல் அலுவலகங்கள் ஊடாகவும் விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.


நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அதிரடி அறிவிப்பு samugammedia  சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை முன்பைப் போலவே வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இராஜாங்க அமைச்சர் தமது டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.647,683 பேருக்கு முன்பைப் போன்று கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் பணம் செலுத்தப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இதன்படி, காத்திருப்போர் பட்டியல் உட்பட 517,962 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 88,602 பேருக்கு விசேட தேவையுடையோருக்கான உதவித் தொகையும், 41,119 பேருக்கு சிறுநீரக நோயாளர் உதவித்தொகையும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.முதியோர் கொடுப்பனவு அஞ்சல் அலுவலகங்கள் ஊடாகவும் விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

Advertisement