• Mar 17 2025

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கம் மூன்று மணிநேர பணிப்புறக்கணிப்பில்..!

Chithra / Mar 17th 2025, 1:25 pm
image


நாடளாவிய ரீதியில்  இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை மூன்று மணிநேர பணிப்புறக்கணிப்பில் அரச தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் இன்று   (17) பகல் 12.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட தாதி உத்தியோகத்தர்கள் தமது கோரிக்கை அடங்கிய பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கம் மூன்று மணிநேர பணிப்புறக்கணிப்பில். நாடளாவிய ரீதியில்  இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை மூன்று மணிநேர பணிப்புறக்கணிப்பில் அரச தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் இன்று   (17) பகல் 12.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்ட தாதி உத்தியோகத்தர்கள் தமது கோரிக்கை அடங்கிய பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.இந்நிலையில், இது தொடர்பாக இன்று நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement