• May 19 2024

13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை! – அலி சப்ரி

Chithra / Jan 22nd 2023, 11:04 am
image

Advertisement

அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக இடம்பெறுவதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை அளிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகுந்த கரிசனையுடன் இருக்கின்றார் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

குறித்த சட்டத்தினை அமுலாக்குவதில் உள்ள நடைமுறைப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை – அலி சப்ரி அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தமிழ்த் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக இடம்பெறுவதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை அளிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகுந்த கரிசனையுடன் இருக்கின்றார் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.அந்த வகையில், தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.குறித்த சட்டத்தினை அமுலாக்குவதில் உள்ள நடைமுறைப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement