தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்."ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்" நடைபெறும் குறும்படப் போட்டி - 2025 தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையினரின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
குறும்படத்திற்கு கதை எழுதுவது எப்படி, புகைப்பட கருவி நுட்பங்கள் மற்றும் காணொளி செம்மையாக்கம், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி குறும்படத்தை எப்படி உருவாக்குவது,
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி குறும்படங்களை எவ்வாறு தயாரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
இதன்போது யாழ் மாவட்ட பாடசாலைகளில் ஊடக கற்கைகள், நாடகம் அரங்கியல் கற்கை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதையும், ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மூலம் தேர்தல் செயல்பாட்டில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கைத் தேர்தல் ஆணையம் "ஒரு வாக்கின் சக்தியின் பௌரா கதைகள்" எனும் குறும்படப் போட்டியை இந்த ஆண்டு ஏற்பாடு செய்துள்ளது.
திறந்த பிரிவு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பிரிவு என இக் குறும்பட போட்டியானது இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது.
இதற்கான தயாரிப்புக்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி திகதி நவம்பர் 14 ஆகும். தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளம் ஊடாக மேலதிக விபரங்களை அறிய முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
"ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்" - மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்."ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்" நடைபெறும் குறும்படப் போட்டி - 2025 தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று இடம்பெற்றது.யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையினரின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.குறும்படத்திற்கு கதை எழுதுவது எப்படி, புகைப்பட கருவி நுட்பங்கள் மற்றும் காணொளி செம்மையாக்கம், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி குறும்படத்தை எப்படி உருவாக்குவது,செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி குறும்படங்களை எவ்வாறு தயாரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.இதன்போது யாழ் மாவட்ட பாடசாலைகளில் ஊடக கற்கைகள், நாடகம் அரங்கியல் கற்கை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதையும், ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மூலம் தேர்தல் செயல்பாட்டில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கைத் தேர்தல் ஆணையம் "ஒரு வாக்கின் சக்தியின் பௌரா கதைகள்" எனும் குறும்படப் போட்டியை இந்த ஆண்டு ஏற்பாடு செய்துள்ளது.திறந்த பிரிவு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பிரிவு என இக் குறும்பட போட்டியானது இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புக்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி திகதி நவம்பர் 14 ஆகும். தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளம் ஊடாக மேலதிக விபரங்களை அறிய முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.