• May 19 2024

உயிரை வாங்கும் விசித்திர பறவைகள்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி! samugammedia

Tamil nila / Apr 12th 2023, 10:07 pm
image

Advertisement

டென்மார்க் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பறவைகளில் இரு புதிய வகையை கண்டறிந்து உள்ளனர். அவை நமது ஊரில் காணப்படும் பறவைகள் போன்று எளிதில் உணவு அளித்து, செல்ல பிராணிகளாக வளர்த்து விட முடியாது. அப்படி நினைக்க கூட முடியாது. அந்த இரண்டு இன பறவைகளும் பரிணாம வளர்ச்சியின் உதவியால் கொடிய, ஆபத்து நிறைந்தவையாக உருமாறி உள்ளன. நியூ கினியா நாட்டின் வன பகுதியில் இந்த வகை பறவையினங்கள் காணப்படுகின்றன. இவை, விஷம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் திறனை வளர்த்து கொண்டுள்ளன.

அதன்பின்னர், இந்த பறவைகளே விஷம் நிறைந்த ஒன்றாக மாறி விடுகின்றன. இதுபற்றி டென்மார்க் நாட்டின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆய்வாளரான நட் ஜான்சன் கூறும்போது, இந்த பறவைகள், சக்தி வாய்ந்த விஷ பொருட்களை சகித்து கொள்ள கூடியவையாக மாறுவது மட்டுமின்றி, அவற்றை தங்களது இறக்கைகளின் அடியில் சேர்த்து வைக்கிறது. அதனால், அவை தனித்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இவை இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் பரவலாக காணப்படும் பச்சிசிபலா ஸ்கிளெகெலி என்ற பறவை குடும்ப வகையை சேர்ந்தவையாகவும் உள்ளன. மற்றொரு பறவையினம் ஆலியாடிரையாஸ் ருபினுச்சா பறவையினங்களில் ஒன்றாக உள்ளது. தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை தவளை இனங்களில் காணப்படும் விஷம் போன்ற ரசாயனங்களை இந்த பறவைகள் சுமந்து திரிகின்றன. இந்த தவளைகளை லேசாக தொட்டாலே மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி விடும். அவ்வளவு விஷ தன்மை கொண்டவை. அதனையொத்த விஷத்தன்மையுடன் இந்த பறவைகளும் உள்ளன.

இந்த பறவையினங்களில் கண்டறியப்பட்ட விஷம் ஆனது, உலகம் முழுவதும் இந்த விஷம் பரவி உள்ளது என அடையாளம் காட்டி உள்ளது என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். தங்க நிற விஷ தவளை இனங்களில் காணப்படும் பத்ராசோடாக்சின் என்ற ஒரு வகை ஆற்றல் வாய்ந்த ரசாயன பொருள், அதிக செறிவுடன் உள்ளபோது, அவை தசைகளை செயலிழக்க செய்வதுடன், தொடர்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மாரடைப்பு ஏற்படுத்தும் சக்தி படைத்தவையாகவும் உள்ளன.

இந்த பறவையின் விஷமும் தவளைகளில் காணப்படுவது போன்று இதே வகையை சேர்ந்தவை. அவை தசை திசுக்களுக்குள் சோடியம் என்ற ரசாயன பொருளை ஊடுருவி செல்ல செய்து, தொடர்ந்து அது திறந்திருக்கும்படி செய்து, இறுதியில் மரணம் ஏற்படுத்தும் என ஆய்வாளர் கசுன் பொடாவட்டா கூறுகிறார்.


உயிரை வாங்கும் விசித்திர பறவைகள்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி samugammedia டென்மார்க் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பறவைகளில் இரு புதிய வகையை கண்டறிந்து உள்ளனர். அவை நமது ஊரில் காணப்படும் பறவைகள் போன்று எளிதில் உணவு அளித்து, செல்ல பிராணிகளாக வளர்த்து விட முடியாது. அப்படி நினைக்க கூட முடியாது. அந்த இரண்டு இன பறவைகளும் பரிணாம வளர்ச்சியின் உதவியால் கொடிய, ஆபத்து நிறைந்தவையாக உருமாறி உள்ளன. நியூ கினியா நாட்டின் வன பகுதியில் இந்த வகை பறவையினங்கள் காணப்படுகின்றன. இவை, விஷம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் திறனை வளர்த்து கொண்டுள்ளன.அதன்பின்னர், இந்த பறவைகளே விஷம் நிறைந்த ஒன்றாக மாறி விடுகின்றன. இதுபற்றி டென்மார்க் நாட்டின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆய்வாளரான நட் ஜான்சன் கூறும்போது, இந்த பறவைகள், சக்தி வாய்ந்த விஷ பொருட்களை சகித்து கொள்ள கூடியவையாக மாறுவது மட்டுமின்றி, அவற்றை தங்களது இறக்கைகளின் அடியில் சேர்த்து வைக்கிறது. அதனால், அவை தனித்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இவை இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் பரவலாக காணப்படும் பச்சிசிபலா ஸ்கிளெகெலி என்ற பறவை குடும்ப வகையை சேர்ந்தவையாகவும் உள்ளன. மற்றொரு பறவையினம் ஆலியாடிரையாஸ் ருபினுச்சா பறவையினங்களில் ஒன்றாக உள்ளது. தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை தவளை இனங்களில் காணப்படும் விஷம் போன்ற ரசாயனங்களை இந்த பறவைகள் சுமந்து திரிகின்றன. இந்த தவளைகளை லேசாக தொட்டாலே மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி விடும். அவ்வளவு விஷ தன்மை கொண்டவை. அதனையொத்த விஷத்தன்மையுடன் இந்த பறவைகளும் உள்ளன.இந்த பறவையினங்களில் கண்டறியப்பட்ட விஷம் ஆனது, உலகம் முழுவதும் இந்த விஷம் பரவி உள்ளது என அடையாளம் காட்டி உள்ளது என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். தங்க நிற விஷ தவளை இனங்களில் காணப்படும் பத்ராசோடாக்சின் என்ற ஒரு வகை ஆற்றல் வாய்ந்த ரசாயன பொருள், அதிக செறிவுடன் உள்ளபோது, அவை தசைகளை செயலிழக்க செய்வதுடன், தொடர்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மாரடைப்பு ஏற்படுத்தும் சக்தி படைத்தவையாகவும் உள்ளன.இந்த பறவையின் விஷமும் தவளைகளில் காணப்படுவது போன்று இதே வகையை சேர்ந்தவை. அவை தசை திசுக்களுக்குள் சோடியம் என்ற ரசாயன பொருளை ஊடுருவி செல்ல செய்து, தொடர்ந்து அது திறந்திருக்கும்படி செய்து, இறுதியில் மரணம் ஏற்படுத்தும் என ஆய்வாளர் கசுன் பொடாவட்டா கூறுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement